Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க லட்சியவாதியா இல்லையான்னு சொல்றோம்..
Optical Illusion Test: இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இவை ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும். இப்படியான படங்கள் புதிர் நிறைந்தவைகளாகவும், கண்களை கவரும வகையிலும் இருக்கும். முக்கியமாக இந்த படங்களை முதலில் பார்க்கும் போது நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
இந்த ஆப்டில் இல்யூஷன் படங்கள் உளவியல் பகுப்பாய்வில் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் லட்சியவாதியா அல்லது ரிலாக்ஸாக இருப்பவராக அறியலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அவை சூரியகாந்தி விதை மற்றும் இரண்டு ஆண்களின் முகம். இவ்விரண்டில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, அவை வெளிப்படுத்தும் குணாதிசயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
சூரியகாந்தி விதை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சூரியகாந்தி விதை தெரிந்தால், உங்களின் இரக்க குணத்தை மற்றவர்கள் மதிப்பார்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கு மத்தியில் நீங்கள் நம்பகமானவராக இருப்பீர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்வதில் சிறந்தவராக இருப்பீர்கள்.
நீங்கள் மற்றவர்களுடன் எவ்வளவு அன்பாக பழகினால், அவர்கள் உங்களிடம் விஷயங்களை மறைக்கும் போது மிகவும் அதிருப்தி அடைவீர்கள். எனவே மற்றவர்களுடன் பழகும் போது எல்லைகளை வகுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்கமாட்டீர்கள். உங்களுக்கு பல்வேறு பொழுதுபோக்குகள் இருந்தாலும், உங்கள் மனதிற்கு பிடித்தவரை கவனிப்பதற்கே அதிக முன்னுரிமை அளிப்பீர்கள்.
இரண்டு ஆண்களின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு ஆண்களின் முகம் தெரிந்தால், எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பீர்கள். மேலும் உங்கள் இலக்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான முயற்சிகளை தீவிரமாக எடுப்பீர்கள்.
நீங்கள் ஒன்றை அடைய நினைத்துவிட்டால், அதை அடையும் வரை ஓயமாட்டீர்கள். வலுவான சுய நம்பிக்கையைக் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை சந்தேகப்பட்டால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டீர்கள். நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். அதற்கான முயற்சிகளையும் எப்போதும் எடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications