Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க மன அழுத்தத்தை எப்படி கையாள்வீங்க-ன்னு சொல்றோம்.
Optical Illusion: உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தான் நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களும் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இப்படிப்பட்ட படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரது அறிவுத்திறனைப் பற்றியும், சூழ்நிலையைக் கையாளும் திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். அதுவும் இந்த படம் நீங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள், தனியாக இருப்பதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள், மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்ற பலவற்றைப் பற்றி தெரியப்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூனையின் தலை மற்றும் தீவு என இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. இந்த படத்தை பார்த்ததும் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அது உங்களைப் பற்றி கூறும். சரி, உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக உள்ளீர்களா?
தீவு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் தீவு தெரிந்தால், நீங்கள் நட்பையும், துணையையும் மதிக்கும் சென்சிடிவ்வான மற்றும் வெளிப்படையான நபராக இருப்பீர்கள். நீங்கள் மற்றவர்களுடன் இருப்பதை விரும்புவீர்கள். மற்றவர்களுக்காக உங்களின் நடத்தையை மாற்றுவது அல்லது உங்கள் ஆளுமையின் சிலவற்றை மறைப்பது போன்றவற்றை கூட செய்வீர்கள். முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் போது, நீங்கள் எந்த முடிவையும் எடுக்கமாட்டீர்கள்.
பூனையின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு பூனையின் முகம் தெரிந்தால், நீங்கள் அரிதாகவே கோபப்படுவீர்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் சிரித்த முகத்துடனேயே சமாளிப்பீர்கள். மோதல்களை தவிர்க்க விரும்புவீர்கள். யாருடனும் சண்டையில் ஈடுபட விரும்பமாட்டீர்கள். ஆனால் உங்களை யாரேனும் சீண்டினால், கட்டுப்படுத்த முடியாத வகையில் கோபம் வரும். நீங்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் மற்றவர்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டே முடிவெடுப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications