Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரிஞ்சது சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி சில புதிர்களைக் கொண்டிருந்தாலும், கண்களை ஈர்க்கும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. அவை ஒரு கை மற்றும் ஒரு மனித முகம். இதில் ஒருவரது கண்களுக்கு எது முதலில் தெரிகிறதோ, அது அந்நபர் சிந்தனையுள்ளவரா அல்லது முடிவெடுக்க முடியாதவரா என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறி, அதற்கான அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதனின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கோபமாக கத்தும் ஒரு மனிதனின் முகம் தெரிந்தால், நீங்கள், ஆழ்ந்த சிந்தனையுள்ள நபர். மேலும் அதிக அக்கறையுள்ள நபரும் கூட. அடிக்கடி நீங்கள் உங்கள் செயல்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள். இது உங்களை ஒரு சிறந்த நபராக வளர உதவுகிறது. ஒரு பிரச்சனையை எடுத்துக கொண்டால், அந்த பிரச்சனையைப் பற்றி ஆழமாக யோசித்து, அதற்கு சிறந்த தீர்வை வழங்குவதில் வல்லவர். இதனால் உங்கள் அன்புக்குரியவர் பிரச்சனை என்றால், அதற்கு தீர்வு காண உங்களிடம் வருவார். மொத்தத்தில் நீங்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதில் வல்லவர்.
மனித கை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு மனிதனின் கை தெரிந்தால், நீங்கள் விரைவாக சிந்திப்பதில் வல்லவர். எவ்வளவு மன அழுத்தத்தில் அல்லது மோசமான சூழ்நிலையில் இருந்தாலும் வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எளிதில் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை தேர்வு செய்ய என்று வரும் போது, அதில் முடிவெடுப்பது என்பது கடினமாக இருக்கும். அப்போது அதிகமாக சிந்திக்கும் திறனால், அதிக குழப்பத்திற்கு ஆளாகி, முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications