Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க காதல் விஷயத்துல எப்படி-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை நமது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும் படங்களாகும். முக்கியமாக இந்த வகை படங்களானது ஒருவரது குணாதிசயங்களை பிரதிபலிக்கும். மேலும் இப்படங்கள் நமது கவனத்தை சிதறவிடாமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பொதுவாக நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் இருக்கும். உங்களுக்கும் அப்படியொரு ஆர்வம் இருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடியுங்கள். அதுவும் நீங்கள் காதல் விஷயத்தில் எப்படிப்பட்டவராக இருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அதை தெரிவிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த படத்தைக் கண்டதும், முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்பதை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த படத்திற்கான காரணம் என்னவென்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் மூன்றுவிதமான விஷயங்கள் உள்ளன. அவை மரங்கள், காதல் ஜோடி மற்றும் பெரிய மீசை கொண்ட மனிதனின் முகம். இந்த மூன்றில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிந்தது என்பதை மனதில் பதித்து, அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பதை பாருங்கள்.
மரங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு மரங்கள் தெரிகிறது என்றால், நீங்கள் காதலுக்காக அதிக நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் துணையின் மீது அதிக அன்பைக் கொண்டிருப்பீர்கள். எப்போதும் எந்த ஒரு விஷயத்திலும் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பீர்கள்.
காதல் ஜோடி
ஒருவேளை இந்த படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு காதல் ஜோடி தெரிந்தது என்றால், நீங்கள் ஒரு நிலையான மற்றும் ஆரோக்கியமான உறவில் உள்ளீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உலகிலேயே உங்கள் வாழ்க்கைத் துணையை விட வேறு எதுவும் முக்கியமானது இல்லை என்ற மனநிலையில் இருப்பீர்கள்.
பெரிய மீசை கொண்ட மனிதன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு பெரிய மீசையை வைத்த மனிதனின் முகம் தெரிகிறது என்றால், நீங்கள் உறவில் ஈடுபடுவதை விட தனிமையில் வாழ்வதே சிறந்தது என்று நினைப்பீர்கள். நீங்கள் எதையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். இதனால் அவசரப்பட்டு காதலிக்காமல், நன்கு சிந்தித்து அதன் பின்னரே எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள்.



Click it and Unblock the Notifications