Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட உள் வலிமையை சொல்றோம்..
Optical Illusion: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்கள் மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் பட ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் உள் வலிமை என்னவென்ப தெரிந்து கொள்ளலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 3 விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் பட்டாம்பூச்சி, இரண்டு முகங்கள் மற்றும் வட்டம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, உங்களின் உள்வலிமை என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு முகங்கள்
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு முகங்கள் இருப்பது போன்று தெரிந்தால், நீங்கள் உறவுகளால் வழிநடத்தப்படுபவர் மற்றும் எதையும் நன்கு பகுப்பாய்வு செய்யக்கூடியவர். தொடர்பு கொள்வதில் வல்லவர். ஒரு விஷயத்தில் மற்றவர்கள் கவனிக்காததை கவனிப்பதில் வல்லவர். பதட்டமான சூழ்நிலைகளில் சமாதானம் செய்வீர்கள். உணர்ச்சி ரீதியாக இணக்கமாக இருப்பீர்கள். மற்றவர்களின் மனதில் இருப்பதை படிக்கும் வலுவான திறனைக் கொண்டிருப்பீர்கள். மொத்தத்தில் உங்களின் வலிமை இயற்கையாகவே மற்றவர்களிடையே ஒரு நல்ல பாலங்களை உருவாக்குவதாகும்.
பட்டாம்பூச்சி
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பட்டாம்பூச்சி தெரிந்தால், நீங்கள் கனவு காண்பவர் மற்றும் ஒரு லட்சியவாதி. பட்டாம்பூச்சிகளானது மாற்றம், படைப்பாற்றல் மற்றும் சுதந்திரத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டவர். உறவுகள் மற்றும் முடிவுகளை வழிநடத்த பெரும்பாலும் உணர்ச்சி நுண்ணறிவைச் சார்ந்திருப்பீர்கள். அனைத்து வடிவங்களிலும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அழகால் உந்தப்படுகிறீர்கள். மொத்தத்தில் உங்களின் வலிமை மாற்றத்தை அழகாக ஏற்றுக் கொள்வீர்கள் மற்றும் உங்களின் கருத்துக்களால் மற்றவர்களை ஊக்குவிப்பீர்கள்.
வட்டம்
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் வட்டம் தெரிந்தால், நீங்கள் எதிலும் சிறப்பாக கவனம் செலுத்தி, சமநிலையுடன், மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இப்படத்தில் உள்ள பட்டம் முழுமை, ஒற்றுமை மற்றும் எளிமையைக் குறிக்கிறது. எனவே இது முதலில் உங்கள் கண்களுக்கு தெரிந்தால், நீங்கள் கவனச்சிதறல்களை கடந்து, முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவதில் வல்லவராக இருப்பீர்கள். எதையும் ஒழுங்காக செய்ய விரும்புவீர்கள். மற்றவர்கள் குழப்பத்தில் இருந்தாலும், நீங்கள் அமைதியாக இருந்து மனதை தெளிவாக வைத்து செயல்படுவீர்கள். மொத்தத்தில் உங்களின் உள் வலிமை என்றால் தெளிவும், நிலையான இருப்பும் தான்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications