Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்கள் நிறைந்த, அதே சமயம் அழகான படங்களாக இருக்கும். இந்த மாதிரியான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபர் வெளிப்படையானவரா அல்லது உள்முக சிந்தனையாளரா என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
மரம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களுடன் எளிதில் நட்பு கொள்வீர்கள். உங்களை சுற்றயிருப்பவர்கள் உங்களை நம்பகமானவராக நினைப்பார்கள். அதுவும் அவர்கள் மனம் திறந்து அவர்களின் ரகசியங்களை பகிரும் அளவுக்கு மிகவும் நம்பிக்கையானவராக நினைப்பார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் உணர்வுகள் உங்கள் துணையுடன் எளிதில் பகிர்ந்து கொள்வீர்கள். மிகவும் நேர்மையான நபர் மற்றும் விசுவாசமானவர்கள். மேலும் நீங்கள் மிகவும் அன்பானவர்.
முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களுடன் அதிகம் பேசமாட்டீர்கள். அனைத்தையும் மனதிற்குள்ளே வைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டீர்கள். இதனால் பலர் உங்களை சிடுமூஞ்சியாக நினைப்பார்கள். அதிக கூச்சசுபாவமும், பய உணர்வையும் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் பரிசுகளின் மூலம் அன்பை வெளிக்காட்டுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications