Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட எந்த மூளை அதிகமா வேலை செய்யுதுன்னு சொல்றோம்..
Optical Illusion: தற்போது இணையதளத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்கள் மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் எந்த பக்க மூளை அதிகமாக வேலை செய்கிறது என்பதை அறியலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் இளம் பெண்ணின் முகம் மற்றும் வயதான பெண்மனியின் முகம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இளம் பெண்ணின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு இளம் பெண்ணின் முகம் தெரிந்தால், உங்கள் வலது மூளையை விட இடது மூளை அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். இதனால் நீங்கள் நடைமுறை வாழ்க்கையை புரிந்து நடந்து கொள்பவர். எந்த ஒரு விஷயத்தையும் விவரமாக கூர்ந்து கவனிப்பதோடு, பகுப்பாய்வு செய்பவர். ஒரு விஷயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு, அந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக அறிந்து, அதன் பின்னரே முடிவெடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, எதையும் நேரடியாகவும் தெளிவாகவும் பேசுவீர்கள். உங்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும். திறம்பட திட்டமிட்டு வேலை செய்வதில் வல்லவர். இவை அனைத்தும் பணியிடத்தில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவுகின்றன.
வயதான பெண்மணியின் முகம்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயதான பெண்மணியின் முகம் தெரிந்தால், உங்கள் மூளையின் இடது பக்கத்தை விட வலது பக்க மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். இதனால் நீங்கள் படைப்பாற்றல் மிக்க நபராக இருப்பீர்கள். எழுத்து, இசையின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும் மற்றும் அதில் சிறந்தவராகவும் இருப்பீர்கள். வாழ்க்கையில் பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, உள்ளுணர்வின் படி முடிவெடுப்பீர்கள். எப்போதும் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பீர்கள். உணர்ச்சி ரீதியாக உணர்திறன் மிக்கவராக இருப்பது உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் மற்றொரு பண்பு.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











