Latest Updates
-
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட வசீகரமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்கள் மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் பட ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் எந்த குணம் மற்றவர்களை ஈர்க்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 3 விதமான உருவங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் மக்கள், பறக்கும் தட்டுகள் மற்றும் ஏலியன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, உங்களின் கவர்ச்சிகரமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மக்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மக்கள் தெரிந்தால், நீங்கள் அற்புதமான சாகச மற்றும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர். இதுவே மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கும். புதுமையான அனுபவங்களைப் பெற ஆவல் கொண்டவர்கள். எப்போதும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டு இருப்பீர்கள். உங்களின் இந்த இயல்பான திறன் உங்களை சமூக சூழ்நிலைகளில் ஒரு விருப்பமானவராக ஆக்குகிறது.
பறக்கும் தட்டு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறக்கும் தட்டு தெரிந்தால், நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் பொறுமைசாலிகள். உங்களின் தாராள மனப்பான்மையும், வசீரகமும் தான் மற்றவர்களை ஈர்க்கின்றன. மேலும் நீங்கள் அன்பான இதயம் கொண்டவர். எப்பேற்பட்ட சவாலான சூழ்நிலைகளிலும் உங்கள் அன்பானவருக்காக நிற்பீர்கள். உங்களுடன் இருந்தால் மற்றவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் மற்றும் உங்களிடம் அனைவரும் மனதில் தோன்றுவதை எளிதில் பகிர்ந்து கொள்வார்கள். அந்த அளவில் நீங்கள் மற்றவர்களுடன் நட்புடன் பழகுவீர்கள்.
ஏலியன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஏலியன் தெரிந்தால், உங்களின் தனித்துவம் தான் மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கிறது. உங்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும், தனித்து நிற்கும் விருப்பமும் தான் உங்களின் சுவாரஸ்யமான குணங்களாகும். நீங்கள் எப்போதும் தனித்துவமான பாதைகளை தேர்ந்தெடுத்து, அதன்படி நடப்பதால், அது உங்களை மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாததாகவும் ஆக்குகிறது. உங்களின் புத்துணர்ச்சியூட்டும் கண்ணோட்டம் மற்றும் உண்மையான ஆளுமையால் மற்றவர்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்,
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications