Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க சுயநலவாதியா, இல்லையான்னு சொல்றோம்..
Optical Illusion: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்கள் மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் தன்னலமற்றவரா அல்லது சுயநலவாதியா என்பதை அறியலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் ஆணின் முகம் மற்றும் நடனமாடும் ஒரு பெண் போன்றவை அடங்கும். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, நீங்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நடனமாடும் பெண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நடனமாகும் பெண் தெரிந்தால், நீங்கள் சற்று சுயநலவாதி. மேலும் நீங்கள் தன்னம்பிக்கையை அதிகம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும், உங்கள் வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முயற்சித்தாலும், நீங்கள் அவர்களை வீழ்த்தவோ, அழிக்கவோ ஒருபோதும் நினைக்கமாட்டீர்கள். உங்களின் முழு கவனமும் உங்கள் இலக்கு மற்றும் நல்வாழ்விலேயே இருக்கும். மேலும் எவ்வளவு பிரச்சனைகள் உங்களை தேடி வந்தாலும், எப்போதுமே அமைதியா இருக்க நினைப்பீர்கள்.
ஒரு ஆணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் தன்னலமற்றவர். நீங்கள் மிகுந்த நம்பிக்கையாளர். அதாவது எல்லாம் நன்மைக்கே என்னும் கொள்கையை கொண்டிருப்பீர்கள். இந்த உருவத்தை முதலில் கண்டிருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நீங்களே கையாள்வீர்கள் மற்றும் எவ்வளவு கடினமான காலமாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள மற்றவர்களை அனுப்புவதற்கு முன் நீங்களே அதை எதிர்கொள்வீர்கள். மொத்தத்தில், நீங்கள் சுயநலமற்றவர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications