Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. மத்தவங்க கிட்ட நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு சொல்றோம்
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு ஒருவரது பார்வையை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமாக இருப்பதோடு, ஒருவர் சோர்ந்திருக்கும் மூளைக்கு வேலையைக் கொடுத்து, புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். இப்படிப்பட்ட படங்கள் ஒருவரைப் பற்றி பல விஷயங்களை தெரியப்படுத்தும்.
அதுவும் இந்த படங்களை பார்க்கும் போது, ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். அதுவும் இந்த படத்தைப் பார்த்ததும் ஒருவருக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு அந்நபரின் குணங்கள் கூறப்படுகின்றன.

இணையத்தில் இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஏராளமாக உலா வருகின்றன. அதில் ஒருவரது சிந்திக்கும் விதமும், மற்றவர்களுடனான அவர்களின் உறவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தெரியப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமாக ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று கிராமம் மற்றும் இரண்டாவது யானை. இதில் ஒருவரது கண்ணில் முதலில் எது தெரிந்ததோ, அதைக் கொண்டு அந்நபரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கவனித்து, அதற்கான விளக்கத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் மாற்றங்களை விரும்புகிறாரா, இல்லையா என்பதை வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது உங்களைப் பற்றி வெளிப்படுத்தும்.
கிராமம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள், குடிசைகள் மற்றும் பறவைகள் போன்றவை நிறைந்த ஒரு கிராமம் முதலில் தெரிந்தால், நீங்கள் பழமைவாத சிந்தனையைக் கொண்டவராக இருப்பீர்கள். பழைய மரபுகளை தவறாமல் பின்பற்றும் ஒருவராக இருப்பீர்கள். பரபரப்பான வாழ்க்கையை விட எளிமையான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள். வாழ்வில் பல ஏமாற்றங்களை சந்தித்ததால், எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருக்கவோ, மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவோ கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். சொந்த விதிகளின் படி வாழ்க்கையை வாழ விரும்புவீர்கள்.
யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு யாணை முதலில் தெரிந்தால், நீங்கள் மிகவும் விசுவாசமான நபராக இருப்பீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள். நிறைய இரக்கம் கொண்டவர்களாக இருப்பீர்கள். எவ்வளவு தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கண்டாலும், தலைகணம் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களை எப்போதும் மரியாதையாக நடத்துவதோடு, பணிவாகவும் நடந்து கொள்வீர்கள். சில சமயங்களில் அதிகமாக சிந்திப்பீர்கள். இதனால் பெரும்பாலான நேரங்களில் நிகழ்காலத்தில் இருப்பதற்குப் பதிலாக எதையாவது யோசித்து வேறொரு உலகத்தில் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications