Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்கள் நிறைந்த, அதே சமயம் அழகான படங்களாக இருக்கும். இந்த மாதிரியான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபர் திட்டமிட்டு செயல்பட விரும்புபவரா அல்லது தன்னிச்சையாக செயல்பட விரும்புபவரா என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
பனியால் மூடப்பட்ட மலைகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பனியால் மூடப்பட்ட மலைகள் தெரிந்தால், நீங்கள் பொறுமைசாலி. எந்த ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதாக இருந்தாலும், அந்த விஷயத்தை பொறுமையாக கவனித்து, அதன் பின்னரே முடிவெடுப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் அவை இருக்கும் விதத்திலேயே எடுத்துக் கொள்வீர்கள். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், படிப்படியாக திட்டமிட்டு செய்ய விரும்புவீர்கள்.
ஓடும் குதிரைகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஓடும் குதிரைகள் முதலில் தெரிந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை குதிரை வேகத்தில் வாழ விரும்புவீர்கள். உங்களால் எதையும் பொறுமையாக செய்ய முடியாது. மிகவும் சுறுசுறுப்பான நபர். எந்த ஒரு விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்புவீர்கள். யாரையும் சார்ந்து இருக்க விரும்பமாட்டீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனைகளை எடுப்பது வேடிக்கையாக இருந்தாலும், அவை எப்போதும் உண்மையான முடிவுகளைத் தருவதில்லை என்பதை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை பொதுவான சோதனைகள். ஒரு நபர் இந்த சோதனைக்கு எவ்வளவு உண்மையாக பதிலளிக்கிறார் மற்றும் இந்த தேர்வை எடுக்கும் நேரத்தில் அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது மற்றும் பலவற்றைப் பொறுத்து அதன் முடிவுகள் இருக்கும். இந்த சோதனையின் முடிவு உங்களைப் பொறுத்தவரை எவ்வளவு சரியாக இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த சோதனை பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications