Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. பட்டமா? அல்லது மேகமா?
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றன. நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் எடுங்கள். இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன.
இந்த மாதிரியான படங்களை விளையாட்டுத்தனமாகவும், புதிர் நிறைந்ததாகவும் கண்களுக்கு காட்சியளிக்கும். இந்த வகை படங்களைப் பார்க்கும் போது, முதலில் நமது மூளை எதை கவனிக்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.

இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வானத்தில் மிதக்கும் மேக கூட்டங்களும், காற்றில் பறக்கும் பட்டமும் உள்ளன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் எந்த உருவம் தெரிகிறது என்று கூறுங்கள். நீங்கள் மற்றவர்களுடன் எளிதில் பழகுபவரா அல்லது மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரா என்பதை கூறுகிறோம்.
மேகங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மிதக்கும் மேகங்கள் தெரிகிறது என்றால், நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். தனிமையை அதிகம் விரும்புபவர்கள். மிகவும் அமைதியானவர்கள். அதிகம் பேசமாட்டீர்கள். ஆனால் எதையும் நன்கு கூர்ந்து கவனிப்பீர்கள். தனிமை விரும்பியாக இருப்பதால், தங்கள் வாழ்க்கைக் குறித்து அதிகம் சிந்திப்பீர்கள். மேகங்கள் அடிக்கடி அதன் வடிவத்தை மாற்றுவது போல நீங்களும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி நடந்து கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனிப்பீர்கள். மேலும் உங்கள் ஆழ்மனம் எப்போதும் ஒருவித சிந்தனையுடன் இருப்பீர்கள்.
பட்டம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பட்டம் தெரிகிறது என்றால், நீங்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகுவீர்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். தெரியாதவர்களிடம் கூட நல்ல நட்புடன் பழகுவீர்கள். ஒரு சாகசவிரும்பியாக இருப்பீர்கள். எப்போதும் புதிய அனுபவங்களைப் பெற விரும்புவீர்கள். அதற்காக பல ரிஸ்க்குகளை எடுக்கவும் தயக்கம் கொள்ளமாட்டீர்கள். கவர்ச்சிகரமான ஆற்றல்களால் மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பீர்கள். சிறந்த பேச்சாற்றலைக் கொண்டிருப்பீர்கள். பேச்சால் பலரை மயக்குவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications