Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த படத்துல முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க குணத்தைப் பத்தி சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படியான புதிர்களைக் கொண்ட அதே சமயம் கவர்ச்சிகரமான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் சற்று விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவற்றைக் கொண்டு மேற்கொள்ளும் சோதனை ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
பொதுவாக நமது கண்களுக்கு தென்படும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. நமது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் நமது குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபரின் பலம் மற்றும் பலவீனமான குணம் என்னவென்பது கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களின் உண்மையான பலம் மற்றும் பலவீனமான குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை எடுங்கள்.
சுறா தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சுறா தெரிந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள். அதே சமயம் தன்னலமற்றவர்களாக இருப்பீர்கள். நீங்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும், இதை வைத்து பலர் உங்களிடம் இருந்து பல காரியங்களை சாதிப்பார்கள். உங்களிடம் உள்ள ஒரு மோசமான குணம் பிடிவாதம். நீங்கள் எப்போதும் உங்களின் கருத்துக்களைத் தான் மற்றவர்களுக்கு திணிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வது உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். மேலும் நீங்கள் மற்றவர்களை கையாளும் போது விரைவில் எரிச்சலடைவீர்கள்.
கால் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கால் தெரிந்தால், நீங்கள் எங்கு இருந்தாலும் அப்பகுதியை சந்தோஷமாக, கலகலப்பாக வைத்திருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி எடுக்கும் போது, அதில் உறுதியாக இருப்பீர்கள். இருப்பினும் வாழ்க்கையை தேர்வு செய்யும் போது குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே கவனித்து வாழ்க்கையை நடத்துவீர்கள். மற்றவர்களுடன் எளிதில் பழகி உறவுகளை எளிதில் உருவாக்குவீர்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் கூட கோபத்தை அல்லது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, அன்பாக நடந்து கொள்வீர்கள். மொத்தத்தில் நீங்கள் வலுவான மற்றும் உறுதியான ஆளுமையை கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications