Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி ஒன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை மூளைக்கு வேலையைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒருவித மன விளையாட்டு. இந்த மாதிரியான படங்களை ஒருமுறை பார்த்தால் ஒரு உருவமும், அடுத்தமுறை பார்த்தால் வேறொரு உருவமும் தெரியலாம். ஏனெனில் இந்த மாதிரியான படங்களானது பலவிதமான உருவங்களைக் கொண்டு கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டிருக்கும்.
சில சமயங்களில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது ஆளுமையைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றன. ஒருவரது ஆளுமையானது அவர்களின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது.
மூளையானது நன்கு சுறுசுறுப்பாக செயல்படும் போது மூளை முதலில் நமது ஆளுமையின் அடிப்படையில் ஒரு உருவத்தை உருவாக்கும். அதைத் தான் நாம் பார்க்கிறோம் மற்றும் புரிந்து நடந்து கொள்கிறோம். இப்படியான நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்.

அப்படி ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்தும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மொத்தம் மூன்று உருவங்கள் உள்ளன. அதில் முதல் 10 நொடிகளில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள். உங்களின் சுவாரஸ்யமான குணம் பற்றி கூறுகிறோம்.
குழந்தை
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குழந்தையின் படம் தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் அளவுக்கு அதிகமாக யோசிப்பீர்கள். இப்படி அதிகமாக யோசிப்பதால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஒரு சூழ்நிலையைப் புரிந்து கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்வீர்கள். இதற்கு காரணம் நீங்கள் அதிகமாக சிந்திப்பது தான்.
மேலும் அனைத்து விஷயங்களிலும் பரிபூர்ணத்தை விரும்புவீர்கள். இதனால் ஒரு முடிவை எடுத்த பின், அந்த முடிவு சரியானதாக இருக்குமா, இருக்காதா என்று பல கோணங்களில் யோசித்து உங்களுக்குள்ளே மீண்டும் மீண்டும் கேள்விகளை கேட்டு விவாதிப்பீர்கள். உங்களிடம் கொடுக்கப்படும் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களிடம் ஆலோசனைக்காக வருவதோடு, உங்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவார்கள்.
மரத்தடியில் ஒரு ஜோடி நிற்பது
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரத்தடியில் ஒரு ஜோடி நின்று கொண்டு நீரை பார்த்தவாறு இருப்பது தெரிந்தால், நீங்கள் ஒரு ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உறவை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கைத் துணை வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்க வேண்டுமென்று அதிகம் விரும்புவீர்கள்.
மேலும் நேர்மையையும், உண்மையையும் விரும்புவீர்கள். உங்களிடம் யாரேனும் பொய் சொன்னாலோ அல்லது உறவில் தீவிரமாக இல்லாவிட்டாலோ, அதை எளிதில் அறிவீர்கள். ஏமாற்றுபவர்களை உங்களுக்கு பிடிக்காது. உங்கள் மனதில் ஒரே நேரத்தில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு விஷயத்தில் மிகவும் வேகமாக முடிவெடுப்பீர்கள்.
மரங்கள்
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் எப்போது ஒருவித குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் சுதந்திர மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். சாகசத்தை விரும்புவீர்கள். ஒரு உறவில் நீங்கள் பிணைந்திருப்பது கடினம்.
எப்போதும் உங்கள் மனதிற்கு பிடித்தவாறு, உங்கள் மனதில் தோன்றுவதையே செய்வீர்கள். முக்கியமாக எந்த ஒரு விஷயத்திலும் தடை ஏற்பட்டால், உடனே நின்று விடாமல், நிலைமையை சிறப்பான முறையில் முன்னோக்கி கொண்டு செல்வீர்கள்.



Click it and Unblock the Notifications