Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க காதல் வாழ்க்கை பற்றி தெரியணுமா? இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு விளையாட்டு போன்றதாக இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். இம்மாதிரியான படங்கள் ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்துவதோடு, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவும் உதவுகிறது. இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன.
இந்த மாதிரியான படங்களைக் காணும் போது நமது மூளை வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளும். அதாவது முதல் முறையாக இந்த படங்களைக் காணும் போது நம் கண்களுக்கு ஒரு உருவமும், அடுத்தமுறை காணும் போது வேறொன்றும் தெரிய வரும். இதற்கு காரணம் நமது மூளையின் செயல்பாடுதான். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, அந்நபரின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் குறித்தும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவி புரியும். அதற்கு இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை குறித்துக் கொள்ளுங்கள், பின் அது உங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயதானவர் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயதானவரின் முகம் தெரிகிறது என்றால், நீங்கள் அவ்வளவு எளிதில் காதலில் விழமாட்டீர்கள். பல காதல் வசனங்களை சொல்லும் நாடகத்தனமான காதல் மீது விருப்பம் இருக்காது. ஆனால் உங்கள் மீது அதிக அக்கறை செலுத்தி, உங்களுக்காக அதிக நேரத்தை ஒதுக்குபவரை காதலிக்க விரும்புவீர்கள்.
ஆற்றோரத்தில் படுத்திருக்கும் பெண்மணி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆற்றின் ஓரத்தில் படுத்திருக்கும் ஒரு பெண் தெரிகிறார் என்றால், நீங்கள் உங்கள் மனதில் பிடித்த துணையை தேடிக் கொண்டிருப்பீர்கள். யாராவது நம்மை காதலிக்கமாட்டார்களா என்றும் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். எந்நேரமும் ஒருவித குழப்பத்திலேயே இருப்பீர்கள். ஏற்கனவே காதல் தோல்வி அடைந்திருந்தால், மீண்டும் காதல் மலர வாய்ப்பில்லை என்று நினைப்பீர்கள்.
குதிரையில் சவாரி செய்யும் நபர்
உங்கள் கண்களுக்கு முதலில் குதிரையில் சவாரி செய்யும் நபர் தெரிகிறது என்றால், உங்களால் ஒருவரை நீண்ட காதலிக்க முடியாது. அதற்காக நீங்கள் உங்கள் துணையை ஏமாற்றுபவர் என்று அர்த்தமல்ல. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஏதேனும் சண்டை வந்தால், உங்கள் துணை உங்களிடம் வந்து பேச வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருவேளை அவர்கள் உங்களிடம் பேசாவிட்டால், நீங்களும் அவர்களை கண்டுகொள்ளமாட்டீர்கள்.
நுழைவாயில்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு நுழைவாயில் தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சாகசத்தை விரும்புவீர்கள். இதனால் உங்களிடம் பொறுமை என்பது சிறிதும் இருக்காது. காதல் உங்களின் சாகச உணர்வைக் கெடுத்துவிடும் என்பதற்காகவே காதலில் விழ பயப்படுவீர்கள். அதற்காக உங்களுக்கு எந்த காதலும் அமையாது என்பதில்லை. நிச்சயம் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு காதல் அமையும்.



Click it and Unblock the Notifications