Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆளு-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆளுமையைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷ்ன் படங்கள் ஒருவரது மனம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பாறை, மனித உருவங்கள் என இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. இந்த படத்தை பார்த்ததும் இவற்றில் ஏதாவது ஒன்று ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் வெளிப்படையாக பேசுபவரா அல்லது தனிமை விரும்பியா என்பதை அறிய தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாறை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பாறைகள் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களுடன் அதிகம் பேச விரும்பாத ஒருவராக இருக்கலாம். மேலும் நீங்கள் மற்றவர்களுடன் பழக விரும்பாதவராக இருக்கலாம். எப்போதும் தனியாகவே இருக்க விரும்புவீர்கள். உங்கள் மனதில் தோன்றுவதை கூட மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். இதனால் உங்களை புரிந்து கொள்வது என்பது மற்றவர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும். மேலும் தனிமை விரும்பியாக இருப்பதால், உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். நண்பர்கள் இருந்தாலும், அவர்களுடன் அதிகம் பேசமாட்டீர்கள்.
மனித முகங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மனித முகங்கள் தெரிந்தால், நீங்கள் அதிகமாக பேசும் நபராக இருக்கலாம். உங்களால் மற்றவர்களுடன் பேசாமல் இருக்க முடியாது. தனிமையை விரும்பமாட்டீர்கள். உங்களைச் சுற்றி எப்போதும் யாரேனும் இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். உங்களைச் சுற்றி யாராவது இருந்தால் தான் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருப்பதாக உணர்வீர்கள். நீங்கள் அதிகமாக பேசுவதால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் நண்பரை எளிதில் உருவாக்கிவிடுவீர்கள். நீங்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். உங்களுடன் இருக்க மற்றவர்கள் அதிகம் விரும்புவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications