Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி ஒன்னு சொல்றோம்..
Optical Illusion: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்கள் மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் பட ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான உருவங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் இளம் பெண்ணின் முகம் மற்றும் வயதான பெண்ணின் முகம். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வயதான பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயதான பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் அமைதியான நபர். நீங்கள் எதையும் ஆராய்ந்த பின்னரே எந்த முடிவையும் எடுப்பீர்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. எந்த ஒரு விஷயத்திற்கும் மற்றவர்களுடன் வாதாடி நேரத்தை வீணடிப்பதை விட உங்களை சுற்றியுள்ளவர்களை அவர்களின் சொந்த வழியில் செல்ல அனுமதிப்பீர்கள். உங்களுக்கு சண்டையிடுவதில் விருப்பம் ஏதும் இருக்காது. அனைத்தையும் அமைதியான முறையில் கையாள விரும்புவீர்கள்.
இளம் பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு இளம் பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் எதையும் நிதானமாக கையாளும் நபர். அதே சமயம் நீங்கள் மிக எளிதில் கோபப்படுவீர்கள். சட்டென்று எரிச்சலடைவீர்கள். மற்றவர்களின் உதவியைப் பெறமாட்டீர்கள். இந்த கோப குணத்தால் மற்றவர்கள் உங்களுடன் அதிகம் பழக விரும்பமாட்டார்கள். மேலும் இந்த ஒரு குணத்தால், உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications