Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க துணைக்கு நேர்மையா இருப்பீங்களான்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படியான புதிர்களைக் கொண்ட, அதே சமயம் கண்களைக் கவரும் அழகான படங்களாக இருக்கும். இந்த மாதிரியான படங்கள் பார்க்க ஒரு விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன.

அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபர் தனது வாழ்க்கை துணைக்கு நேர்மையானவரா இல்லையா என்பதை தெரியப்படுத்தும். நீங்கள் உங்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
கத்தி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கத்தி தெரிந்தால், நீங்கள் அதிகம் பிடிவாதம் பிடிப்பவராக, ஒன்றை செய்வதில் அதிக வெறித்தனம் கொண்டு இருப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் துணையை நேசிப்பது போல் நடிப்பீர்கள். உங்களுக்கு உங்கள் துணையை ஏமாற்ற வாய்ப்பு கிடைத்தால், அதை தயங்காமல் மேற்கொள்வீர்கள். மேலும் நீங்கள் ஒரு புதிய நபரை சந்தித்தால், உங்கள் துணைக்கு தெரியாமல் அவருடன் தொடர்பு கொள்ள தயங்கமாட்டீர்கள். இது தவிர உங்களுக்குள் இருக்கும் பிடிவாதம் உங்களை ஆக்ரோஷமாக ஆக்குகிறது. இது உங்கள் உறவுகளில் எப்போதும் பிரச்சனையை உண்டாக்கும்.
கரடி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கரடி தெரிந்தால், நீங்கள் இயற்கையாகவே மிகவும் விசுவாசமானவர்கள், கருணை உள்ளம் கொண்டவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டிருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள். பெரும்பாலும் அவர்களுடனேயே நேரத்தை செலவிட விரும்புவீர்கள். நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உண்மையாக இருப்பீர்கள் மற்றும் அவர்களை எப்போதும் பாதுகாப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications