Latest Updates
-
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம் -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான பயத்தை சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்ட அதே சமயம் அழகான படங்களாக இருக்கும். இந்த மாதிரியான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபரின் உண்மையான பயணம் என்னவென்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களின் உண்மையான பயத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
மூஞ்சுறு
உங்கள் கண்களுக்கு முதலில் மூஞ்சுறு தெரிந்தால், நீங்கள் அவமானம் மற்றும் கேலியை நினைத்து பயப்படுவீர்கள். இதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கவனமாக செய்வீர்கள். மேலும் நீங்கள் என்ன தான் சுதந்திரமாக இருக்க விரும்புபவராக இருந்தாலும், மற்றவர்களை நம்புவதை நினைத்து அஞ்சுவீர்கள். பரிதாபமும், கேலியும் உங்களின் நம்பிக்கையைக் குறைக்கும். யாரேனும் உங்களிடம் பரிதாபப்பட்டு பேசினால், உங்கள் மீதான மதிப்பு குறைந்திருப்பதாக உணர்வீர்கள். நீங்கள் எப்போதும் சுய முன்னேற்றத்திற்கு தான் முன்னுரிமை அளிப்பீர்கள் மற்றும் வேலையில் மிகவும் பொறுப்பாக இருப்பீர்கள். முக்கியமாக உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள்.
முகம்
உங்களின் கண்களுக்கு முதலில் ஒரு முகம் தெரிந்தது என்றால், நீங்கள் தனிமைப்படுத்தப்படுவதை நினைத்து அதிகம் பயப்படுவீர்கள். நீங்கள் மற்றவர்களுடன் பழகுவது வெறும் தேவைக்கு மட்டுமல்ல, உங்களின் மன ஆரோக்கியத்திற்காகவும் தான். சுருக்கமாக கூற வேண்டுமானால், தனிமை தான் உங்களின் முக்கியமான மற்றும் உண்மையான பயம். தனிமையானது உங்களை உணர்ச்சி ரீதியாக பலவீனமாக்கிவிடும். எனவே எப்போதும் உங்களைச் சுற்றி யாரேனும் இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். என்ன தான் நீங்கள் சுதந்திரமாக இருந்தாலும், உங்களுடன் யாரேனும் ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். இது உங்களுக்கு ஒருவித மன அமைதியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications