Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல எந்த மிருகம் தெரியுது சொல்லுங்க.. உங்களோட சிறந்த குணத்தை சொல்றோம்...
Optical Illusion: இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு கண்களை கவரும்படி சற்று வித்தியாசமாக இருக்கும். அதோடு இந்த படங்களில் பல விஷயங்கள் மறைந்திருக்கும்.
சைகாலஜி படி, இந்த படங்களை முதலில் பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதத்தில் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரது குணங்கள், பயம் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். கீழே ஒரு சுவாரஸ்யமான மற்றும் புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் எந்த மிருகம் தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் சிறந்த குணம் என்னவென்பதை கூற முடியும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 8 விதமான மிருகங்கள் மறைந்துள்ளன. இதை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மிருகம் தென்படலாம். இந்த படத்தை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு முதலில் எந்த மிருகம் தெரிகிறது என்பதை கூறி, உங்களின் சிறந்த குணம் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஒட்டகச்சிவிங்கி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒட்டகச்சிவிங்கி தெரிந்தது என்றால், நீங்கள் எந்த ஒரு விஷயங்களுக்கும் அதிகம் கவலைப்படுவீர்கள். எதற்கும் அதிகம் பதட்டப்படமாட்டீர்கள். எதையும் ரிலாக்ஸாக இருந்து கையாள்வீர்கள். இதனால் உங்களுடன் இருக்க பலரும் விரும்புவார்கள்.
2. வாத்து
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் வாத்து தெரிந்தால், நீங்கள் மிகவும் விசுவாசமானவர்கள். உங்களை மற்றவர்கள் அதிகம் நம்புவார்கள். மேலும் மக்கள் உங்களை தங்களுடன் வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார்கள்.
3. கோலா
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு கோலா தெரிந்தால், உங்களின் சிறந்த குணம் உங்களின் உள் வலிமை தான். இப்படி வலிமையான மன தைரியத்தைக் கொண்டிருப்பதால், எதையும் துணிந்து செய்ய தயங்கமாட்டீர்கள். உங்களை யாரேனும் தவறாக பயன்படுத்திக் கொண்டால், அவர்களை ஒருகை பார்க்காமல் விடமாட்டீர்கள்.
4. பன்றி
இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு பன்றி முதலில் தெரிந்தால், நீங்கள் மிகவும் வேடிக்கையானவர். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். எதையும் நகைச்சுவை உணர்வுடன் கையாள்வீர்கள். இதனால் உங்களுடன் நட்பு கொள்ள பலரும் விரும்புவார்கள்.
5. கரடி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு கரடி தெரிந்தால், நீங்கள் தைரியமான நபர். மற்றவர்கள் உங்களை அச்சமற்றவர்களாக நினைப்பார்கள். அதாவது உங்களுக்கு சரியென்று படும் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். இதுவே உங்களை தைரியமானவர்களாக காட்டுகிறது.
6. பூனை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு பூனை தெரிந்தால், உங்களுக்கு எப்படி ஒருவருடன் பேசுவது என்பது நன்கு தெரியும். என்ன தான் நீங்கள் சிறந்த பேச்சாளராக இருந்தாலும், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் காது கொடுத்து கேட்பீர்கள். இது உங்களின் மிகச்சிறந்த குணமாகும்.
7. யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களுக்கு யானை முதலில் தெரிந்தால், நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையில் புதிய நட்புக்களை உருவாக்குவீர்கள். நன்கு கலகலவென்று பேசக்கூடியவர். புதிய நபர்களை சந்தித்து அவர்களுடன் நட்புறவு கொள்ள விரும்புவீர்கள்.
8. ஆந்தை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆந்தை தெரிந்தால், நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க விரும்புவீர்கள். புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தைக் கொண்டிருப்பீர்கள். இந்த குணம் உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் ஊக்குவிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications