Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
இந்த படத்தில் முதலில் எந்த மிருகம் தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க வலுவான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது உண்மையான குணாதியங்களை வெளிப்படுத்தக்கூடிய ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த வகையான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் சுவாரஸ்யமான ஆளுமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான உண்மையைத் தெரியப்படுத்தும். அதுவும் இந்த படமானது உங்களின் ஆதிக்க குணம் என்னவென்பதை வெளிப்படுத்தும்.

இந்த படத்தில் 4 விதமான உருவங்கள் ஒளிந்துள்ளன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் ஆதிக்க குணம் என்ன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வரிக்குதிரை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் வரிக்குதிரை தெரிந்தால், நீங்கள் உங்களை சுற்றியிருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். கவர்ச்சியான தோற்றத்துடன், ஆளுமையையும் கொண்டவர். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். இதனால் எங்கு சென்றாலும் நீங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களிடம் நல்ல தகவல்தொடர்பு திறன் இருக்கும். புதிதாக ஏதாவது ஒன்றை அனுபவிக்க விரும்புவீர்கள்.
சிங்கம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சிங்கம் தெரிந்தால், பெருமித உணர்வை அதிகம் கொண்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை, போட்டி மற்றும் வலுவான ஆசையை கொண்டவராக இருப்பீர்கள். சிறந்த தலைவருக்கான அனைத்து குணத்தையும் கொண்டிருப்பீர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். இதனால் சில சமயங்களில் குழுப்பணிகளை தவிர்ப்பீர்கள்.
சிங்கம் மற்றும் வரிக்குதிரை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கம் மற்றும் வரிக்குதிரை தெரிந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு குணங்களும் இருக்கும். அத்துடன் மற்றவர்களுடன் நன்கு தொடர்பு கொள்வீர்கள். வலுவான தலைமைத்துவ பண்பைக் கொண்டிருப்பீர்கள். இது பொறுப்புக்களை சிறப்பாக கையாள உதவுகிறது.
வரிக்குதிரை மீது பறவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு வரிக்குதிரை மீது பறவை தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமை பெறுவதை நோக்கமாக கொண்டிருப்பீர்கள். இது வாழ்வில் உங்களை சிறந்து விளங்க உதவுகிறது. இருப்பினும், அனைத்திலும் சிறந்தவராக இருப்பது என்பது முடியாது. அனைவருடனும் கருணையுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications