Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட பலவீனத்தை சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரது ஆளுமையை மற்றும் மறைக்கப்பட்ட பலம் அல்லது பலவீனத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு சுவாஸ்யமான வழியாகும். நம் ஒவ்வொருவருக்குமே நமது ஆளுமையை ஒரு விஷயத்தின் மூலம் அறிய முடியும் என்றால், அதை முயற்சிக்க விரும்வோம். உங்களுக்கும் அப்படி உங்களின் ஆளுமையை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை ட்ரை செய்யுங்கள்.
இந்த வகை படங்களானது பல விஷயங்களைக் கொண்டிருக்கும். ஒருவரது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்து, முதல் முறை இப்படங்களை பார்க்கும் போது முதலில் ஒரு விஷயமும், அதுவே அடுத்தமுறை கூர்ந்து கவனிக்கும் போது வோறொன்றும் தெரியும். இப்படி நமது கண்களுக்கு தெரியும் ஒவ்வொன்றும் ஒருவரது ஆளுமையின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. சொல்லப்போனால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு போன்று இருக்கும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ, அது உங்களின் ஆழ்மனதில் மறைந்துள்ள மிகப்பெரிய பலவீனத்தை வெளிப்படுத்தும். என்ன உங்களின் பலவீனத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
வயது முதிர்ந்த இசைக்கலைஞர்
உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு வயது முதிர்ந்த இசைக்கலைஞர் தெரிந்தால், நீங்கள் பெரும்பாலும் இலக்குகளால் இயக்கப்படுவீர்கள். இந்த இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். இப்படி கடினமாக உழைக்கும் போது, சில சமயங்களில் அன்புக்குரியவர்களுடன் ஆழமாக தொடர்பு கொள்வது கடினமாக இருக்கும்.
ஒரு மனிதனின் முகம்
உங்கள் கண்களுக்கு ஒரு மனிதனின் முகம் தெரிந்தால், உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் அன்பானவருடன் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்பது அவசியம்.
ஒரு பெண்ணின் முகம்
உங்கள் கண்களுக்கு ஒரு பெண்ணின் முகம் தெரிந்ததா? அப்படியானால் மற்றவர்கள் உங்களை ஒரு வலிமையான, யாராலும் அசைக்க முடியாத தலைவராக பார்க்கிறார்கள். என்ன தான் நல்ல தலைவராக நீங்கள் தெரிந்தாலும் மற்றவர்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க அஞ்சுவீர்கள். அதற்காக அனைத்து வேலைகளையும் நீங்களே இழுத்துப் போட்டு செய்ய முடியாது அல்லவா? அப்படி செய்தால் பணிச்சுமை அதிகரித்து மிகுதியாக சிரமப்படுவீர்கள்.
மீசை வைத்த மனிதன்
உங்கள் கண்களுக்கு முதலில் மீசை வைத்த மனிதன் தெரிந்தால், நீங்கள் புதிய அனுபவங்களைப் பற்றி அறிய ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் பிடிவாத குணம் அதில் தடையை ஏற்படுத்தும். என்ன தான் மனதில் பயம் இருந்தாலும், மாற்றங்களை ஏற்றுக் கொண்டால், உங்களின் முன்னேற்ற பாதை திறக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: YourTango



Click it and Unblock the Notifications