Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. உங்க சிறந்த குணத்தை சொல்றோம்..
Optical Illusion Test: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த படங்களை முதலில் பார்த்த உடனே நமது மூளை முதலில் எப்படி எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டில் இல்யூஷன் படங்கள் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதைக் கொண்டு ஒருவரின் அறிவாற்றல், நேர்மறை மற்றும் எதிர்மறை குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் சிறந்த குணாதிசயங்களைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நான்கு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அவற்றில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, அவை கூறும் குணாதிசயங்களை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.
1. கலைஞர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு கலைஞரின் உருவம் தெரிந்தால், உங்களின் மிகப்பெரிய பலம் உங்களின் கற்பனைத் திறன் தான். நல்ல கற்பனைத் திறன் கொண்டவர்கள் மற்றவர்களைப் போல் எப்போதும் யோசிக்காமல் வித்தியாசமாகவே யோசிப்பார்கள். மேலும் கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். வித்தியாசமாக சிந்திக்கும் உங்களின் திறனால் அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும்.
2. தாடி வைத்த மனிதன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு தாடி வைத்த மனிதன் தெரிந்தால், உங்களின் சிறந்த குணாதிசயம் விடாமுயற்சி. இப்படி விடாமுயற்சியைக் கொண்டவர்கள் அதிக தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதை முடிக்காமல் விடமாட்டார்கள். அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் கடினமான காலங்களில் கூட லட்சியங்களை அடைய உதவும்.
3. மக்கள் கூட்டம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு மக்கள் கூட்டம் தெரிந்தால், உங்களின் சிறந்த குணம் உணர்ச்சிமிக்க உற்சாகம். மேலும் நீங்கள் மற்றவர்களுடன் சிறப்பாக தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டிருப்பீர்கள். அதுவும் ஆழமான உரையாடல்கள் மறறும் உற்சாகமான சமூக கூட்டங்கள் ஆகிய இரண்டையும் விரும்புவீர்கள். உணர்ச்சிமிக்க உற்சாகத்தைக் கொண்டவர்கள் எப்பேற்பட்ட இடத்திலும் ஆற்றலையும், உற்சாகத்தையும் தருவார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இப்படி சந்தோஷமாக வைத்திருப்பதால், சுற்றியிருப்பவர்களின் மேல் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
4. முகமுடி அணிந்த உருவம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முகமுடி அணிந்த உருவம் தெரிந்தால், உங்களின் சிறந்த குணம் பேச்சுத்திறன் தான். பேச்சாற்றல் கொண்டவர்கள் திறம்பட தொடர்பு கொள்வதோடு, பேச்சால் எப்பேற்பட்ட காரியத்தையும் திறம்பட முடிப்பார்கள். மேலும் கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்கள். இப்படியான பேச்சாற்றல் காரணமாக இவர்கள் திறமையான தலைவர்களாக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: The Minds Journal



Click it and Unblock the Notifications