இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட விசித்திரமான குணத்தை சொல்றோம்...

Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றன. இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை கவரும்படி வித்தியாசமாக இருப்பதோடு, அதில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் குணாதிசயங்கள், ரகசியமான அச்சங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். கீழே ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் விசித்திரமான குணாதிசயங்களைக் கூற முடியும்.

Optical Illusion Test What You See First Will Reveal Your Weirdest Personality

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 5 விதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இதை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒன்வொன்று தென்படலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, உங்களின் விசித்திரமான குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆணின் முகம்..

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு ஆணின் முகம் தெரிந்தால், உங்கள் கருத்துக்களை மற்றவர்களுக்கு திணிக்காமல் இனிமையாக பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் அறிவு மற்றும் அனுபவங்களால் மற்றவர்களுக்கு உதவுவதே நோக்கமாக இருந்தாலும், சில சமயங்களில் இது மற்றவர்களை அவமதிப்பதாகவோ அல்லது சங்கடமாகவோ உணர வைக்கும். எனவே மற்றவர்களின் கருத்துக்களையும் காது கொடுத்து கேளுங்கள்.

மேலே இருவர் எட்டிப் பார்ப்பது..

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு மேலிருந்து இருவர் எட்டிப் பார்ப்பது போன்று தெரிந்தால், நீங்கள் சமூகத்தில் மிகவும் மோசமான ஆளுமை பண்புகளைக் கொண்டவராக தெரிவீர்கள். உங்களின் அதிகப்படியான ஆர்வம் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை தெரிந்து கொள்ள தூண்டும். மேலும் அதிகம் கிசுகிசு பேசுவீர்கள்.

ரயில்

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ரயில் தெரிந்தால், சாதுர்யமின்மை சமூக ரீதியாக உங்களின் விசித்திரமான குணாதிசயமாக இருக்கலாம். உங்களின் சில பழக்கவழக்கங்கள் தேவையற்றதாக தோன்றினாலும், மற்றவர்களுக்கு அது முக்கியமானதாக இருக்கும். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பேசுவது உங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தும். உங்களின் உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டுமானால் இந்த குணத்தை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஒரு பெண்ணும், இரண்டு உருவங்களும்..

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு பெண்ணும், இரண்டு உருவங்களும் தெரிந்தால், நீங்கள் ஒரு திறந்த புத்தகம். அதாவது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்கமாட்டீர்கள். ஆனால் இப்படி அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது சில சமயங்களில் உங்களை மோசமானதாக வெளிக்காட்டலாம். சிலர் உங்களின் நேர்மையை பாராட்டலாம். இன்னும் சிலர் உங்களுடன் வலுவான தொடர்பை உணரலாம். ஆனால் முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது என்பது விரும்பத்தகாததாக இருக்கலாம். அதோடு மற்றவர்களும் உங்களைப் போன்றே திறந்த புத்தகம் போன்று இருக்க வேண்டிய அழுத்தத்திற்கு தள்ளப்படலாம்.

வெள்ளை நிறத்தில் இரண்டு நபர் அமர்ந்திருப்பது

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உங்கள் கண்களுக்கு முதலில் வெள்ளை நிறத்தில் இரண்டு நபர் அமர்ந்திருப்பது தெரிந்தால், மௌனம் தான் உங்களின் விசித்திரமான குணமாகும். ஏதாவது ஒரு முக்கியமான பொது கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது, அதில் பேசாமல் அமைதியாகவே இருப்பீர்கள். மொத்தத்தில் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசாமல் அனைத்து இடங்களிலும், சூழ்நிலைகளிலும் அமைதியாகவே இருப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Image Courtesy: The Minds Journal

Story first published: Wednesday, July 17, 2024, 21:33 [IST]
Desktop Bottom Promotion