Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க பலம், பலவீனத்தை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க..
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். விளையாட்டுத்தனமாக இந்த படங்கள் இருந்தாலும், இது ஒருவரது நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்களை வெளிப்படுத்தும். உங்களுக்கு உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை பற்றி தெரியாதா? அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை எடுங்கள்.
கீழே ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பலவிதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இந்த படத்தை ஒருவர் முதலில் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் கண்களில் தென்படலாம். உங்கள் கண்களுக்கு இந்த படத்தில் முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். பின் அதற்குரிய அர்த்தத்தை படித்து, உங்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதனின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு மனிதனின் முகம் தெரிந்தால், எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் நீங்கள் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். இதுவே உங்களின் பெரிய பலமாகும். எவ்வளவு பெரிய நெருக்கடியின் போதும், அதை நிதானமாக நீங்கள் கையாளும் விதம், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, உத்வேகம் பெறுவார்கள். உங்களின் பலவீனம் என்றால், உங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களை புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கும்.
மேஜை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மேஜை தெரிகிறது என்றால், உங்களின் பலம் மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பது தான். மற்றவர்களின் கூற்றை பொறுமையாக கேட்பதன் மூலம், மற்றவர்களின் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பெறுவதோடு, அவர்களின் மனதில் இருப்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். உங்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் என்றால், முடிவுகளை எடுப்பதும், பின்பற்றுவதும் தான். மற்றவர்கள் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போது, அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவீர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதிலும், அதை செயல்படுத்துவதிலும் சிரமப்படுவீர்கள். இத்தகையவர்களுக்கு உள்ளுணர்வை நம்பி எந்த ஒரு முடிவையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
பெண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண் வெள்ளை நிற ஆடை அணிந்து புத்தகத்தைப் படிப்பது போன்று தெரிந்தால், உங்களின் மிகப்பெரிய பலம் உங்களின் அறிவுத்திறன் தான். புதிய விஷயங்களைக் கற்க அதிகம் விரும்புவீர்கள் மற்றும் எப்போதும் எதையாவது பற்றிய அறிவைப் பெற விரும்புவீர்கள்.
நாற்காலி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நாற்காலி தெரிந்தால், உங்களின் மிகப்பெரிய பலம் உங்களின் வாழ்க்கைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம் கொண்டிருப்பது தான். இப்படி வித்தியாசமான கண்ணோட்டமானது பல பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை பெற உதவுகிறது. உங்களிடம் உள்ள பலவீனம் என்றால், ஒரு விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த போராடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: the minds journal



Click it and Unblock the Notifications