Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வருகின்றன. இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை கவரும்படி வித்தியாசமாக இருப்பதோடு, அதில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் குணாதிசயங்கள், ரகசியமான அச்சங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். கீழே ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் ஆழ்மனதில் உள்ள பாதுகாப்பின்மை என்பதை கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 2 விதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இதை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒன்வொன்று தென்படலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, உங்களின் பாதுகாப்பின்மை என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கண்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கண் தெரிந்தால், நீங்கள் உங்கள் இலக்கை அடைவதில் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள். நன்றாக இருந்தாலும் உணர்ச்சி ரீதியாக எப்போதும் பாதுகாப்பற்றவராகவே உணர்வீர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். உங்கள் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து அதிகம் கவலைப்படுவீர்கள்.
இயற்கையாகவே நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். சிறந்த படைப்பாற்றலைக் கொண்டவர்கள். உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர விரும்புவீர்கள். அதே வேளையில் ஆறுதல் மண்டலத்தில் இருக்க விரும்புவீர்கள்.
பள்ளம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பள்ளம் தெரிந்தால், நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர். மேலும் உங்களிடம் மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள அதிகம் விரும்பினாலும், உங்கள் எல்லைகளை வரைந்து, அதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்பவர். மற்றவர்களுடன் மிகவும் நட்பாக பழகுவீர்கள். ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை அதிகமாக கட்டுப்படுத்த விடாமல் இருப்பது முக்கியம். நீங்கள் மற்றவர்களால் எளிதில் திசைதிருப்பப்படுவீர்கள். முடிவுகளை எடுப்பது உங்களுக்கு சற்று சவாலாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications