Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட நண்பர்-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. ஏன் உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் அறிவாற்றல், குணாதிசயங்கள், ரகசியமான அச்சங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் எப்படிப்பட்ட நண்பராக இருப்பீர்கள் என்பதை கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மூன்று விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் டிராகன், சிப்பாய் மற்றும் தொப்பி அணிந்த மனிதன். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, நீங்கள் எப்படிப்பட்ட நண்பர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
டிராகன்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் டிராகன் தெரிந்தால், நீங்கள் மிகவும் விசுவாசமான நண்பர். உங்கள் நண்பர் தவறாக நடந்தாலும், அவர்களை பாதுகாக்க தயங்கமாட்டீர்கள். வலுவான நீதி உணர்வும், தைரியமும் உங்களை சிறந்த நண்பராக்குகிறது. அதே சமயம் உங்களுக்கு மறுபக்கமும் உள்ளது. அது தான் அதிக கோபம். உங்களின் ஆர்வம் போற்றத்தக்கதாக இருந்தாலும், சில நேரங்களில் அது உங்கள் நண்பர்களுக்கு சவால்களை உருவாக்கலாம். எனவே இதைத் தவிர்க்க நீங்கள் பொறுமையுடன் எதையும் கையாள முயற்சிக்க வேண்டும்.
சிப்பாய்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு சிப்பாய் தெரிந்தால், நீங்கள் விசுவாசமானவர். எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நீங்கள் எப்போதும் உங்கள் நண்பருக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உங்கள் நண்பரின் சார்பாக சூடான வாக்குவாதத்தில் ஈடுபடும் முதல் நபராக நீங்கள் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக மிகவும் வலிமையான நபர் மற்றும் உங்கள் நண்பருக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பீர்கள். சில சமயங்களில் நீங்கள் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த தயங்குவீர்கள். ஆனால் உண்மையில் உங்கள் நண்பர்கள் எப்போதும் உங்களின் கருத்துக்களை பாராட்டுவார் என்பதால் எப்போதும் உங்களின் எண்ணங்களை பகிர தயக்கம் கொள்ளாதீர்கள்.
தொப்பி அணிந்த ஒரு ஆணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் தொப்பி அணிந்த ஒரு ஆணின் முகம் தெரிந்தால், நண்பராக உங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு உங்கள் நகைச்சுவை. மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட பதற்றத்தை குறைத்து மனதை ரிலாக்ஸாக்கும் திறனை கொண்டிருப்பீர்கள். புத்திசாலித்தனமான நகைச்சுவையால் எப்போதும் உங்களை சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களைச் சுற்றி இருப்பதை விரும்புவார்கள். ஏனெனில் சவாலான சூழ்நிலைகளிலும் நீங்கள் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications