Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின உண்மைய சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் படங்களாகும். இப்படியான படங்கள் ஏராளமாக இணையத்தில் உலா வருகின்றன. இந்த வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும்.
இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை ஒரு முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் குணாதிசயங்கள், ரகசியமான பயம் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் உண்மையான குணாதிசயங்களைக் கூறலாம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் படகு மற்றும் முதலை. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, அது கூறும் குணாதிசயங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
படகு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் படகு தெரிந்தால், நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக கவனிப்பீர்கள். சிறந்த படைப்பாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் தனித்துவமான குணாதிசயத்தைக் கொண்டிருப்பதால், அனைவரும் உங்களுடன் பழக விரும்புவார்கள். எப்பேற்பட்ட சிக்கலையும் திறம்பட கையாண்டு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். இப்படியான குணத்தால் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் எப்போதும் இப்படி எந்த ஒரு விஷயத்தையும் கூர்மையாக கவனிக்கும் திறனே உங்களின் நேரத்தை அதிகம் வீணாக்குவதோடு, பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும்.
முதலை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முதலை தெரிந்தால், நீங்கள் எப்போதும் உஷாராக இருப்பீர்கள். நீங்கள் திறம்பட திட்டம் தீட்டுவீர்கள் மற்றும் சிறப்பான முடிவுகளை எடுப்பதிலும் வல்லவர்கள். சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட கையாள்வீர்கள். விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிப்பீர்கள். உங்களின் நடைமுறை இயல்பு வாழ்க்கையின் பல அம்சங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களின் திட்டப்படி எதுவும் நடக்காவிட்டால், அதற்காக கவலைப்படாமல், வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க உங்களை அனுமதியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: The Mind Journal



Click it and Unblock the Notifications