Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனைகள் ஒருவரது ஆளுமை பண்புகளை வெளிப்படுத்த உதவும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான வழி. ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது பார்ப்பதற்கு கண்களைக் கவரும்படி இருப்பதோடு, புதிர் நிறைந்ததாகவும் இருக்கும். நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனைகளை ட்ரை செய்து பாருங்கள். இப்போது ஒரு சுவாரஸ்யமான ஆளுமை சோதனை படத்தைக் காண்போம்.
இந்த ஆளுமை சோதனையானது நீங்கள் ஒரு உறவில் எந்த மாதிரி நடந்து கொள்வீர்கள் என்பதை வெளிப்படுத்தும். அதுவும் நீங்கள் அன்பு அல்லது காதலில் நம்பிக்கை கொண்டவரா அல்லது நம்பிக்கையற்றவரா என்பதை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனை வெளிப்படுத்தும். இந்த கவர்ச்சியான ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உருவாக்கியவர் மியா டிலின். இவரது பல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உலா வந்து மக்களிடையே பிரபலமாகவும் உள்ளன.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு சிங்கத்தின் முகம் அல்லது ஒரு உறைபனி நிறைந்த மரத்தை காணலாம். இவ்விரண்டும் தனித்துவமான அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்பதைக் கூறி, உங்களின் குணாதிசயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மரம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களை நம்புவதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். முதலில் ஒருவருடன் பழகும் போது சற்று ஒதுங்கியே இருப்பீர்கள். ஆனால் அவர்களைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்த பின், அவர்களுடன் நன்கு பழகுவீர்கள். நீங்கள் நண்பர்களுக்க மிகவும் விசுவாசமானவர்கள். நீங்கள் உங்களின் வாழ்க்கையைப் பற்றி யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள் என்பதால், மற்றவர்கள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். காதல் என்று வரும் போது, நீங்கள் முதலில் எந்த ஒரு முயற்சியையும் செய்ய விரும்பமாட்டீர்கள். ஆனால் உங்கள் துணை வந்து பேச வேண்டுமென்று விரும்புவீர்கள்.
சிங்கத்தின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கத்தின் முகம் தெரிந்தால், நீங்கள் வெளியே சுற்ற விரும்புவீர்கள். கவர்ச்சிகரமான மற்றும் நம்பிக்கையான ஆளுமையைக் கொண்டிருப்பதால், மற்றவர்களை எளிதில் நண்பராக்குவீர்கள் மற்றும் மற்றவர்களுடன் எளிதில் பழகுவீர்கள். போலித்தனமாக நடந்து கொள்வதை விரும்பமாட்டீர்கள். எந்த ஒரு சண்டையிலும் ஈடுபட விரும்பமாட்டீர்கள். நீங்கள் மிகவும் நம்பகமானவர் என்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு நீங்கள் பிடித்தமானவராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்வீர்கள். உங்கள் மனதிற்கு ஒருவரைப் பிடித்துவிட்டால், அவரிடம் தனது காதலை சட்டென்று வெளிப்படுத்துவீர்கள் மற்றும் உங்கள் காதலருக்கு நேர்மையாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications