Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புகை அல்லது குழந்தை - இதுல உங்க கண்ணுக்கு முதலில் என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க..
Optical Illusion Test: இணையத்தில் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகையான படங்களில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இந்த படங்களை முதலில் பார்த்த உடனே நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் மிகவும் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் அறிவாற்றல், குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் சுவாரஸ்யமான குணாதிசயங்களைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அவை புகை மற்றும் கருவில் இருக்கும் குழந்தை. இவ்விரண்டில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, அவை வெளிப்படுத்தும் குணாதிசயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
புகை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் புகை தெரிந்தால், நீங்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை மற்றவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். யாராவது உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டால், அதை நினைத்து அதிகம் வருத்தப்படுவீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களை இழந்து விடுவோமோ என்ற ஒருவித கவலை எப்போதும் இருக்கும்.
கருவில் உள்ள குழந்தை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் கருவில் உள்ள குழந்தை தெரிந்தால், உங்களுக்கு எது சரி, எது தவறு என்பது பற்றிய தெளிவு இருக்கும். கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, அவற்றை எப்படி எளிதில் கையாள்வது என்பதை நன்கு அறிந்து, திறம்பட கையாள்வீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்ததை மட்டுமே செய்வீர்கள். மிகவும் நேர்மையானவர்கள். நேர்மையை மதிப்பதால், நேர்மையாக நடப்பவரையும் மதிப்பீர்கள். மிகவும் நம்பகமானவராக இருப்பீர்கள். சிறந்த நண்பராக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications