Latest Updates
-
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது! -
மணமணக்கும்.. ஆட்டுக்குடல் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப் போறாங்களாம்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க எந்த மாதிரியான ஆளுன்னு சொல்றோம்..
Optical Illusion Test: உங்களுக்கு ரொம்ப போர் அடிக்குதா? உங்கள் மூளை சோர்ந்து போயிருப்பது போல் உள்ளதா? சோர்ந்துள்ள மூளைக்கு வேலையை கொடுக்கும் படியான பல ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் உள்ளன.
அந்த படங்கள் பார்க்க சாதாரணமாக தோன்றிலும், அந்த படத்திற்குள் நிறைய படங்கள் ஒளிந்திருப்பதால், அவை மூளையின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
அதோடு ஒருசில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதியங்களைப் பற்றி வெளிப்படுத்தும். நீங்கள் உங்கள் குணாதியங்களில் உள்ள மர்மங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?
அப்படியானால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை உங்களைப் பற்றி கூறும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சலிப்பைக் குணப்படுத்தும் விளையாட்டுகளாகக் கருதப்பட்டாலும், அவை உங்களைப் பற்றி மேலும் அறியவும் உங்கள் பார்வையை சரிபார்க்கவும் உதவும்.
கீழே ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க சாதாரணமாக தோன்றினாலும், இதனுள் இருவேறு உருவங்கள் ஒளிந்துள்ளன. இந்த படத்தை சற்று உற்று பார்த்தால், அவை தெரியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவர் எந்த மாதிரியான மனதைக் கொண்டவர்கள் என்பதை தீர்மானிக்க உதவும்.

ஆளுமை சோதனை படம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முதலில் உங்களுக்கு எது தெரிகிறது என்று கூறுங்கள். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, உங்களின் குணாதிசயம் அப்படி தான் இருக்கும். அதுவும் இந்த படமானது நீங்கள் திடமான மனதைக் கொண்டவரா அல்லது கள்ளங்கபடம் இல்லாத நல்ல மனதைக் கொண்டவரா என்பதைக் கூறும்.
ஒரு பெண் ஆப்பிளை பறிப்பது
இந்த படத்தில் உங்களுக்கு முதலில் ஒரு பெண் ஆப்பிளை பறிப்பது போன்று தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் கள்ளங்கபடம் இல்லாத ஒரு அப்பாவி என்று அர்த்தம். இத்தகையவர்கள் தங்களைச் சுற்றி உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பார்கள். மேலும் இவர்கள் தன்னுடன் பழகும் அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவார்கள்.
எல்லோரும் நல்லவர்கள் அல்ல என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தனக்கு பிடித்தவர்கள் மீது அதிக அக்கறைக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், எப்படி உணர்வார்கள் என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பார்கள். மொத்தத்தில், இவர்கள் எளிதில் மற்றவர்களால் ஏமாறக்கூடியவர்களாக இருப்பர்.
மரங்களில் ஒரு பெண்ணின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனை படத்தில் உஙக்ளுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிகிறதா, அப்படியானால் நீங்கள் திடமான மனதைக் கொண்டவர்கள் மற்றும் உங்களிடம் நிறைய ஆற்றல் இருக்கும். உங்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள்.
மிகவும் நேர்மமையானவர்கள் மற்றும் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இப்படி வெளிப்படையாக பேசுவதாலேயே மற்றவர்களுடன் நிறைய வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். எப்போதும் எதிர்காலத்தில் எது சிறந்ததாக இருக்குமோ, அதைப் பற்றி யோசித்து எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள்.



Click it and Unblock the Notifications