Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
இதுல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க மூளை சொல்வதை கேப்பீங்களா அல்லது மனசு சொல்றத கேப்பீங்களா-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி சில புதிர்களைக் கொண்டிருந்தாலும், கண்களை ஈர்க்கும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் இரண்டு விதமான முகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவரது கண்களுக்கு எந்த முகம் சிரித்தப்படி தெரிகிறதோ, அது அந்நபர் இதயம் அல்லது மூளை இவற்றில் எதைக் கேட்டு நடப்பார் என்பதைத் தெரியப்படுத்தும். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு எந்த முகம் சிரித்தவாறு தெரிகிறது என்று கூறி, அதற்கான பதிலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. இடது புற முகம்
உங்களுக்கு இடதுபக்க முகம் சிரிப்பது போன்று தெரிந்தால், உங்கள் மூளையின் இடது பக்கம் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தம். உங்களுக்கு இடது பக்கத்தில் உள்ள முகம் வலது பக்கத்தில் உள்ள முகத்தை விட சந்தோஷமாக இருப்பது போன்று தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையில் மிகவும் முறையான மற்றும் நடைமுறை அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள். மேலும் நீங்கள் இதயம் சொல்வதை விட மூளை சொல்வதையே கேட்டு நடப்பீர்கள். வாழ்க்கையில் நீங்கள் தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பதில் சிறந்தவராக இருந்தாலும், மற்றவர்களிடம் சற்று கனிவாக இருக்க வேண்டும்.
2. வலது புற முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு வலதுபக்கத்தில் உள்ள முகம் இடது பக்கத்தை விட மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்தால், உங்களின் வலது பக்க மூளை அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்று அர்த்தம். நீங்கள் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். அதாவது, நீங்கள் மூளை சொல்வதை விட இதயம் சொல்வதையே கேட்டு நடப்பீர்கள் மற்றும் எந்த முடிவையும் எடுப்பீர்கள். இதன் விளைவாக சில சமயங்களில் இது உங்களுக்கு எதிராக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
