Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இதுல உங்களுக்கு என்ன பூ தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது பல்வேறு விஷயங்கள் நிறைந்த ஒரு சுவாரஸ்யமான புதிர் விளையாட்டு. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது அறிவாற்றலை மட்டுமின்றி ஆளுமையைப் பற்றியும் வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் இம்மாதிரியான படங்கள் மூளையின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. நமது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் இந்த படங்களில் உள்ள விஷயங்கள் நமது கண்களுக்கு தெரியும்.
இப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஏராளமாக உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் சூரிய காந்தி, ரோஜா என இரண்டு பூக்கள் உள்ளன. இந்த பூக்களுள் உங்கள் கண்களுக்கு எந்த பூ முதலில் தெரிந்தது என்று கூறுங்கள். உங்களின் ஒரு சுவாரஸ்யமான குணாதிசயங்களை அது தெரியப்படுத்தும்.

சூரியகாந்தி பூ
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சூரியகாந்தி பூ தெரிந்தது என்றால், அது உங்களின் அரவணைப்பையும், நேர்மறையான எண்ணத்தையும் குறிக்கிறது. நீங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் நேர்மறையுடன் கையாள்வீர்கள்.
மன கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருப்பதோடு, அவர்களின் மனக்கஷ்டத்தைப் போக்கி சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். இதனாலேயே உங்களிடம் பழக அனைவரும் விரும்புவார்கள். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு மகிழ்ச்சியை பரப்புவீர்கள். உங்களின் நேர்மறையான பேச்சு மற்றும் எண்ணத்தால், மற்றவர்கள் உங்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பையும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.
ரோஜாப் பூ
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உங்கள் கண்களுக்கு முதலில் ரோஜாப்பூ தெரிந்தது என்றால், அது உங்களின் ரொமான்டிக் மற்றும் சென்சிடிவ் பண்பைக் குறிக்கிறது. மேலும் நீங்கள் அழகை வெளிப்படையாக பாராட்டுவீர்கள். அதோடு நீங்கள் அன்பை தேடுவீர்கள்.
அதுமட்டுமின்றி உங்களின் அன்பை வார்த்தைகள், செயல்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர் என்பதால் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பீர்கள். உங்களின் சென்சிடிவ் குணத்தால், மற்றவர்களின் சூழ்நிலைகளைப் புரிந்து, அவர்களுக்கு தேவையான நேரத்தில் ஆறுதலாக இருப்பீர்கள்.
Image Courtesy: themindsjournal.com
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications