Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
இந்த படத்துல கார் எந்த பக்கம் போகுது-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான உண்மைய சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருப்பதோடு, இவற்றில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். இப்படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன.
எனவே நீங்கள் உங்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டால், ஆப்டிகல் இல்யூஷன் பட ஆளுமை சோதனையை எடுங்கள். உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும்.

அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறியலாம். இங்கு கார் செல்வது போன்ற ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முதலில் பார்த்ததும், அந்த கார் எந்த பக்கம் செல்வது போன்று தெரிகிறது என்று கூறுங்கள். பின் உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கார் உங்களை நோக்கி வருவது போன்று தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கார் உங்களை நோக்கி வருவது போன்று தெரிந்தால், நீங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் நபராக இருக்கலாம். எப்போதும் உங்கள் மனம் அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பற்றியே இருக்கும். முற்போக்கான சிந்தனையாளராக இருப்பீர்கள். உறவுகள், தொழில் என்று எதுவாக இருந்தாலும், அடுத்து என்ன நடக்கும் என்பதை பற்றி எதிர்பார்ப்புடன் இருப்பீர்கள். எதையும் அதிகமாக பகுப்பாய்வு செய்யாமல் உடனே முயற்சி செய்வீர்கள். வாழ்க்கையில் விஷயங்களை முன்னோக்கி நகர்த்த மற்றவர்களை நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் மாட்டி வெளியே வர முடியாமல் இருந்தாலும், நீங்கள் முன்னோக்கி செல்லும் பாதையை பார்க்கும் வகையிலான நபர்.
கார் உங்களை விட்டு விலகி செல்வது போன்று தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு கார் உங்களை விட்டு விலகி செல்வது போன்று தெரிந்தால், நீங்கள் ஒன்றை செய்வதற்கு முன் ஆழமாக சிந்திப்பீர்கள். ஒரு விஷயத்தை உடனே எடுத்து விரைந்து முன்னேறுவதற்கு பதிலாக, கடந்து வந்த பாதையை அடிக்கடி நினைத்து, அந்த அனுபவத்தின் மூலம் எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக கையாள்வீர்கள். உங்கள் பார்வை சிந்தனைமிக்கதாகவும், உணர்ச்சி நுண்ணறிவுடன் நிறைந்ததாகவும் இருக்கும். அதாவது, எதையும் திட்டமிட்டு செய்பவர். அதோடு ஒரு விஷயத்தில் அடுத்து என்ன என்பதை மட்டுமின்றி, ஏன் இப்படி நடக்கிறது என்பதையும் ஆராயும் ஒருவராக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications