Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஒவ்வொருவருக்குமே தங்களின் குணாதிசயங்களைப் பற்றி மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒரு வழி தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த வகை படங்கள் பல விஷயங்கள் நிறைந்து கண்களைக் கவரும் வகையில் இருக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால், புதிர் நிறைந்தவையாக இருக்கும். இந்த வகை படங்களை ஒருமுறை பார்க்கும் போது ஒரு மாதிரியும், மறுமுறை பார்க்கும் போது வித்தியாசமாகவும் காணப்படும். இந்த வகை படங்களில் உள்ள விஷயங்களானது ஒருவரது மூளை செயல்படும் விதத்தைப் பொறுத்தது.

அந்த வகையில் காதலைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வோம். சிலர் தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள், சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த போராடுவார்கள், சிலர் மிகவும் ரொமான்டிக்காக இருப்பார்கள், சிலருக்கு சுட்டுப்போட்டாலும் ரொமான்ஸ் வராது. நீங்கள் காதல் விஷயத்தில், குறிப்பாக நீங்கள் எவ்வளவு ரொமான்டிக்கானவர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவி புரியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று விதமான விஷயங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு மண்டை ஓடு. இந்த மூன்றில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்பதை மனதில் கொண்டு, அதற்கான அர்த்தத்தை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆணின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆணின் முகம் தெரிந்தால், நீங்கள் ஒரு குழந்தை போன்று பாசத்தை உங்கள் துணையிடம் எதிர்பார்ப்பீர்கள். உங்கள் துணையிடமிருந்து பெறப்படும் பாசத்தையும், அக்கறையையும் அதிகம் மதிப்பீர்கள். உங்கள் காதலைப் பற்றி மட்டுமே நீங்கள் அதிகம் யோசிப்பது, உங்கள் துணையின் தேவைகளையும், விருப்பத்தையும் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதன் விளைவாக உங்களை காதலிப்பவர் உங்களை ஒரு ரொமான்டிக்கானவராக இல்லை என உணர வைக்கும். ஆனால் உண்மையில் நீங்கள் ரொமான்டிக்கானவர். ஆனால் அதை சரியாக வெளிப்படுத்த தெரியாது.
பெண்ணின் முகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு பெண்ணின் முகம் தெரிந்தால், நீங்கள் உண்மையான காதலைக் கொண்டிப்பீர்கள். சிறு வயதில் இருந்தே உங்கள் காதல் கதையை கற்பனை செய்து கொண்டிருப்பீர்கள். உங்கள் ஆத்ம துணைக்காக காத்திருப்பீர்கள். ஆனால் அவ்வளவு எளிதில் நீங்கள் காதலில் விழுந்துவிட மாட்டீர்கள். உங்களை ஒருவர் ஈர்ப்பது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்துவிட்டால், அவரை மனதார காதலிப்பர்கள் மற்றும் மிகவும் ரொமான்டிக்காக நடந்து கொள்வீர்கள்.
மண்டை ஓடு தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு மண்டை ஓடு தெரிந்தால், நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை அரிதாகவே வெளிப்படுத்துவீர்கள். இப்படி உங்கள் உணர்ச்சிகளை அரிதாக வெளிப்படுத்துவதோடு, மனதில் பட்டதை மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி யோசிக்காமல் பட்டென்று பேசிவிடுவீர்கள். இப்படி பேசுவதால், உங்களுடன் பழகுபவர் உங்களை காதல் இல்லாதவர் என்று நினைக்கலாம். ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்தவரை நீங்கள் பார்த்துவிட்டால், உங்களுக்குள் புதைந்திருக்கும் காதல் வெளிவந்து, உங்களை யாரும் நம்பமுடியாத அளவில் ரொமான்டிக்கானவராக மாற்றிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications