Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த 4 வகை சூரிய அஸ்தமனத்தில், உங்களுக்கு எது பிடிச்சிருக்கு சொல்லுங்க.. உங்களோட ரகசியத்தை சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு புதிர் நிறைந்த சுவாரஸ்மான படங்கள் மட்டுமின்றி, ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தவும் செய்கின்றன. நீங்கள் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணாதிசயங்கள், ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தால், இந்த ஆளுமை சோதனையை மேற்கொள்ளலாம். இப்படங்களானது நமது மனம் செயல்படும் விதத்தை வெளிப்படுத்தும்.
ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனை படங்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் 4 விதமான சூரிய அஸ்தமனமாகும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் உங்களுக்கு பிடித்தது எது என்று கூறுங்கள். உங்களின் சுவாரஸ்மான ஆளுமை திறன்களைப் பற்றி கூறுகிறோம். என்ன ரெடியா? இப்போது இந்த படத்தில் ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள். பின் அந்த படம் கூறுவது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

படம் 1
உங்களுக்கு முதல் படம் பிடித்திருந்தால், நீங்கள் ஆற்றல்மிக்க நபர். வேலை என்று வந்தால், அதில் நன்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கமாக மற்றவர்கள் பின்பற்றும் வழியை பின்பற்றாமல் தனி வழியை பின்பற்றுவீர்கள். சிறந்த கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டிருப்பீர்கள். உங்களின் சிறந்த புதுமையான யோசனைகள் தான் தொழிலில் நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண முக்கிய காரணமாகும். இந்த புதுமையான யோசனைகள் தான் உங்களை வாழ்வில் உயரத்தையும், அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்று தருகிறது.
படம் 2
உங்களுக்கு இரண்டாவது படம் பிடித்திருந்தால், நீங்கள் மற்றவர்களின் எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளால் எளிதில் திசைதிருப்பப்படமாட்டீர்கள். திறந்த மனதுடையவர் மற்றும் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு பேசாமல் எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். ராஜதந்திர திறன்களைக் கொண்டிருப்பீர்கள். நல்ல சிந்தனையாளர்கள். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் யோசித்த பின்னரே முடிவெடுப்பீர்கள்.
படம் 3
உங்களுக்கு மூன்றாவது படம் பிடித்திருந்தால், நீங்கள் ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டீர்கள். மிகவும் தைரியசாலிகள். எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும், மற்றவர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் கவனமாக இருப்பீர்கள். எப்பேற்பட்ட சவால்களையும் தைரியமாக சமாளிப்பீர்கள். சற்றும் சிரமப்படாமல் நேருக்கு நேர் எதிர்கொள்வீர்கள். முக்கியமாக சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ளும் விதம் உங்களின் வெற்றிக்கு உதவும் ஒரு வலுவான குணம் ஆகும்.
படம் 4
4 ஆவது படம் நல்ல அதிர்ஷ்டத்தையும, நேர்மறை அதிர்வுகளையும் குறிக்கிறது. உங்களுக்கு 4 ஆவது படம் பிடித்திருந்தால், உங்களுக்கு எவ்வளவு மோசமான விஷயங்கள் நடந்தாலும், அந்த சூழ்நிலையின் பிரகாசமான பக்கத்தையே எப்போதும் பார்ப்பீர்கள். எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பீர்கள். நல்ல படைப்பாற்றலைக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாக அணுகுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications