Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க உண்மையான குணம் என்ன-ன்னு சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது ஒருவரது மூளையின் செயல்பாடு, ஆளுமை பண்புகள், ஆசைகள் மற்றும் ஒருவரது ப்ளஸ், மைனஸ் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான படங்களாகும். இந்த வகை படங்கள் பார்ப்பதற்கு சற்று கவர்ச்சிகரமாகவும், மூளைக்கு சற்று வேலை கொடுக்கும் வகையிலும் இருக்கும். இந்த படங்களை முதன்முறையாக ஒருவர் பார்க்கும் போது, அவரது கண்களுக்கு முதலில் என்ன தென்படுகிறதோ, அதை அடிப்படையாக கொண்டு ஒருவரது குணாதியங்கள் கூறப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை marina__neuralean என்பவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ஒரு நபரின் உண்மையான இயல்பைச் சொல்வதாகக் கூறுகிறது. நீங்கள் உங்களின் உண்மையான குணத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன மிருகம் தெரிகிறது என்பதை கூறி, அந்த மிருகத்திற்கான அர்த்தத்தை படித்து உங்களின் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

பறவை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறவை தெரிந்தால், நீங்கள் எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடியவர் மற்றும் சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். படைப்பாற்றல் கொண்டவர்கள். மாற்றத்திற்கு சற்றும் அஞ்சமாட்டீர்கள். ஆனால் எதிலும் சுதந்திரத்தை தேடுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் உங்களின் குணம், உங்களை சுற்றியிருப்பவர்களை ஊக்குவிக்கும். இதனால் உங்களுடன் இருக்க அனைவரும் விரும்புவார்கள்.
மான் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மான் தெரிந்தால், நீங்கள் மிகவும் சென்சிடிவ்வான நபர் மற்றும் மற்றவர்கள் மீது அதிக இரக்கம் காட்டுவீர்கள். அதிக அக்கறை காட்டும் நபர் என்பதால், மற்றவர்களின் போராட்டங்களில் ஈடுபட்டு, அவர்களுக்கு துணையாக இருப்பீர்கள். இதனால் மற்றவர்களுடன் எளிதில் இணையும் நபராக இருப்பீர்கள். நீங்கள் வலுவான உள்ளுணர்வுடன், பொறுமைசாலி என்பதால் மிகவும் சவாலான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள்.
ஒட்டகச்சிவிங்கி தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒட்டகச்சிவிங்கி தெரிந்தால், நீங்கள் நகைச்சுவையான ஆளுமையை கொண்டிருப்பீர்கள். எவ்வளவு மோசமான சூழ்நிலைகளில் இருந்தாலும், எளிதில் மீண்டு வரும் திறனைக் கொண்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பதால், வாழ்க்கையில் சந்திக்கும் பல சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.
காண்டாமிருகம் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் காண்டாமிருகம் தெரிந்தால், நீங்கள் யாராலும் அசைக்க முடியாத வலிமையான குணத்தை கொண்டவர்கள். ஒரு முடிவை எடுத்து விட்டால், அதில் உறுதியாக இருப்பீர்கள். எவ்வளவு பெரிய கஷ்டத்தை சந்தித்தாலும், அதைக் கொண்டு அஞ்சாதவர்கள். சற்றும் தயக்கமின்றி பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பீர்கள்.
நரியை பார்த்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நரி தெரிந்தால், நீங்கள் புத்திசாலி மற்றும் திறமையானவர்கள். அதே சமயம் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். புத்திசாலித்தனத்தால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் தகவமைப்புத் திறன் எந்த சூழ்நிலையையும் எளிதாகக் கையாள உங்களை அனுமதிக்கிறது.
யானையை பார்த்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் யானை தெரிந்தால், நீங்கள் வலிமையானவர் மற்றும் புத்திசாலி. கடினமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பீர்கள். தனிப்பட்ட வளர்ச்சியைக் காண வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். உங்களின் மிகப்பெரிய பலமே பொறுமையும், மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வேலை செய்யும் திறனும் தான்.
ஓநாயை பார்த்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஓநாய் தெரிந்தால், நீங்கள் சுறுசுறுப்பான நபர். உறுதியானவர், தைரியமானவர், சவால்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டீர்கள். உங்களின் கவர்ச்சியான தோற்றமும், ஆளுமையும் உங்களை எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் தலைவராக்கும். இதனால் உங்கள் வழியைப் பலரும் பின்பற்றுவார்கள்.
ஆடு தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஆடு தெரிந்தால், நீங்கள் உறுதியானவர், இலக்கை நோக்கி பயணிக்கக்கூடியவர், விடாமுயற்சியுடன் எதையும் செய்யக்கூடியவர். வெற்றி பெற வழியில் எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை கடந்து செல்வீர்கள். உங்களின் நேர்மை, விசுவாசம், நம்பகத்தன்மையால், மற்றவர்கள் உங்களை எப்போதும் மதிப்பார்கள்.
சிறுத்தை தெரிந்தால்..
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிறுத்தை தெரிந்தால், நீங்கள் தைரியமானவர், சாகச விரும்பிகள். தொடர்ந்து புதிய அனுபவங்களைப் பெற விரும்புவீர்கள். சவால்களை எதிர்கொள்ள விரும்புவீர்கள். எதற்கும் அஞ்சாத உங்களின் குணம் வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிய வைக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் திறம்பட விரைவாக பதிலளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications