Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
இந்த படத்துல ஒரு சூரியனை செலக்ட் பண்ணுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்...
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் சில படங்களை அடிப்படையாக கொண்ட சோதனைகளாக அல்லது ஒரு படத்தில் உள்ள ஏதாவது ஒன்றை தேர்வு செய்வதைக் கொண்டு அந்நபரின் உண்மையான பண்புகள் கூறப்படுகின்றன. இல்லாவிட்டால் ஒருவரது மூக்கு, நெற்றி போன்ற உடல் அம்சங்களை அடிப்படையாக கொண்டு குணங்கள் கூறப்படலாம்.
அந்த வகையில் கீழே ஒரு சுவாரஸ்யமான ஆளுமை சோதனை படம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 8 வகையான சூரியன் உள்ளன. அதில் ஒருவர் எந்த சூரியனை தேர்ந்தெடுக்கிறாரோ, அதை அடிப்படையாக கொண்டு அந்நபரின் குணங்கள் மற்றும் உணர்வுகள் கூறப்படுகின்றன. இந்த சுவாரஸ்மான ஆப்டிகல் இல்ஷன் படத்தை marina__neuralean என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, ஒவ்வொரு சூரியனுக்குமான விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.

நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணத்தை மற்றும் தற்போதைய உணர்வை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சூரியனில் உங்கள் கவனத்தை ஈர்த்த சூரியன் எது என்பதை பார்த்து, அதன் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சூரியன் 1
முதல் சூரியன் ஆற்றலையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுபவர்களுக்கு இந்த வகையான சூரியன் பெரும்பாலும் பிடிக்கும். உங்கள் குடும்பத்தையும் பாரம்பரியத்தையும் புரிந்து கொள்வது, உங்களை நன்கு புரிந்து கொள்ள உதவும்.
சூரியன் 2
இந்த சூரியன் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்பதைக் குறிக்கிறது. அதுவும் இது நீங்கள் யாரும் பார்க்காத உள் அழகை காண்கிறீர்கள். நீங்கள் ஒரு தனித்துவமான நபர். மாயாஜால மாற்றங்கள் உங்களை நோக்கி வரும். அவை ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கண்ணோட்டத்தை அவ்வப்போது கொண்டு வரும்.
சூரியன் 3
உங்களுக்கு 3 ஆவது சூரியன் பிடித்திருந்தால், நீங்கள் எதிலும் ஆழத்தை தேர்வு செய்வீர்கள். எப்போதும் எதிலும் உண்மையை தேடுவீர்கள். உண்மையானதை மட்டுமே மதிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் நீங்கள் மிகவும் நேர்மையானவர் மற்றும் கனிவானவர்.
சூரியன் 4
உங்களுக்கு 4 ஆவது சூரியன் பிடித்திருந்தால், தற்போது உங்களுக்கு ஒரு பயணம் அவசியமாக இருக்கும். அதுவும் இந்த பயணம் உடல் ரீதியான பயணம் அல்ல, மன ரீதியான பயணம். அதாவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை கண்டறிந்து அதை மேற்கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பிறந்தவர்கள் என்பதை மறவாதீர்கள்.
சூரியன் 5
உங்களுக்கு 5 ஆவது சூரியன் பிடித்திருந்தால், நீங்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளர். உங்கள் மனதில் சக்தி வாய்ந்த கருத்துக்கள் மறைந்திருக்கும். உங்கள் வேலையில் கூடுதல் கட்டுப்பாட்டை வைத்திருப்பதனால், எளிதில் முடிப்பீர்கள்.
சூரியன் 6
உங்களுக்கு 6 ஆவது சூரியன் பிடித்திருந்தால், நீங்கள் எளிமையையும், ஆறுதலையும் மதிக்கிறீர்கள். தேவையில்லாமல் தங்களின் சௌகரியத்தை விட்டு வெளியே வர விரும்பாதவர். மிகவும் கனிவானவர், உண்மையானவர். இவை இரண்டினால் உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை எப்போதும் பாராட்டுவார்கள்.
சூரியன் 7
உங்களுக்கு 7 ஆவது சூரியன் பிடித்திருந்தால், ஒரு விஷயம் திரும்ப திரும்ப நடப்பதை உணரலாம். அதாவது ஏதோ ஒரு சூழலில் சிக்கி கொண்டிருப்பதாக உணர்வீர்கள். தற்போது உங்களுக்கு ஒரு மாற்றம் அவசியமான ஒன்றாக இருக்கும். இந்த மாற்றம் உங்களை நிகழ்காலத்திற்கு மீண்டும் கொண்டு வரக்கூடும்.
சூரியன் 8
உங்களுக்கு 8 ஆவது சூரியன் பிடித்திருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. உங்களுக்கு நிறைய கேள்வி கேட்கும் பழக்கம் இருக்கும். இது தவறுகளை தவிர்க்க உதவும். தன்னம்பிக்கையான நபர், சிந்தனை மற்றும் சுய விழிப்புணர்வு கொண்டவர். இது உங்களை வாழ்வில் முன்னேறி செல்ல உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications