Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குதிரை, தலை, இசையமைப்பாளர் - இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரிதுன்னு சொல்லுங்க..
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உள்ளன. இந்த மாதிரியான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போது நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் அறிவாற்றல், குணாதிசயங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் பார்க்கப் போகிறோம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் குணாதிசயங்களைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பலவிதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் மனிதனின் முகம், இசைக்கருவிகளை இசைக்கும் ஒருவர், குதிரை, துப்பாத்தி, சரக்கு மற்றும் கப் போன்றவை அடங்கும். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் தெரிகிறது என்பதை சொல்லிவிட்டு தொடர்ந்து படித்து, அதற்கான குணாதிசயங்களை அறிந்து கொள்ளுங்கள்.
குதிரை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குதிரை தெரிகிறது என்றால் உங்களை முதன்முதலாக பார்ப்பவர்கள் உங்களை அமைதியானவர் என்று நினைப்பார்கள். ஆனால் உங்களுடன் பழகிய பிறகு தான் நீங்கள் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியும். உங்களை பிடிக்காதவர்கள் அல்லது விலகி இருப்பவர்களிடம் இருந்து, நீங்களும் விலகியே இருங்கள். அப்படி சில காலம் இருந்தால், நிச்சயம் உங்களைப் பற்றிய எண்ணத்தை மாற்றி, உங்களுடன் அவர்களே பேச முனைவார்கள்.
இசையமைப்பாளர்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இசைக்கருவியை வாசிக்கும் ஒருவர் தெரிகிறார் என்றால், நீங்கள் அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்களின் அழகான புன்னகையால் உங்களுடன் அதிக நேரம் பேச மற்றும் பழக விரும்புவார்கள். உங்களிடம் பேசும் நபர்கள், சிறிது நேரம் உங்களிடம் பேசினாலும் அவர்களின் மனதில் உள்ள பாரம் குறைவதை உணர்வார்கள். நேர்மறையான எண்ணங்களை அதிகம் கொண்டிருப்பீர்கள். எளிமையாக பழகும் உங்களின் குணத்தால் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்.
தலை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்களின் கண்களுக்கு முதன்முதலாக ஒரு மனித தலை தெரிகிறது என்றால், நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடனும், புன்னகையுடனும் இருப்பீர்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். உங்களிடம் பேச அனைவரும் விரும்புவார்கள். அனைவரது பிரச்சனையையும் காது கொடுத்து கேட்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது மிகவும் ஆதரவாக, அக்கறையாக இருப்பீர்கள். ஆனால் அவர்களும் உங்கள் மீது அக்கறையாக இருக்கிறார்களா என்பதை கவனியுங்கள்.



Click it and Unblock the Notifications