Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
இதுல உங்க கண்ணுக்கு குதிரை எந்த திசையில் போகுற மாதிரி இருக்கு-ன்னு சொல்லுங்க.. உங்க குணத்தை சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒருவரது குணாதிசயங்களை தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த சுவாரஸ்யமான மற்றும் கண்களைக் கவரும் படங்கள். என்ன தான் நம்மைப் பற்றி நமக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் நம்மைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் உங்களின் குணங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை எடுங்கள்.
இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை பற்றி மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன், உணர்வுகள் போன்ற பல விஷயங்களை கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்களின் கண்ணோட்டத்தையும் தெரியப்படுத்தும். அதுவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரையில் ஒருவர் பயணிப்பதை காணலாம். ஆனால் இதில் உங்கள் கண்களுக்கு குதிரை முன்னோக்கி வருகிறதா அல்லது பின்னோக்கி செல்கிறதா என்று கூறுங்கள். உங்களின் குணம் எப்படி இருக்கும் என்று கூறுகிறோம்.
குதிரை முன்னோக்கி வருவதைக் கண்டால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்க கண்ணுக்கு குதிரை முன்னோக்கி வருவது போன்று தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதை குறிக்கிறது. ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால், அந்த விஷயத்தின் பிரகாசமான பக்கத்தில் கவனம் செலுத்துவீர்கள். சவால்களால் உங்களை நீண்ட காலம் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் நீங்கள் எதிர்காலத்திற்கான பார்வையுடன், இலக்குகளை நோக்கி பயணிப்பவர். இதற்காக எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். எப்போதும் பெரிதாக கனவு காண்பீர்கள். அந்த கனவை அடையவும் முயற்சிகளை எடுப்பீர்கள்.
குதிரை பின்னோக்கி செல்வதைக் கண்டால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு குதிரை பின்னோக்கி செல்வது போன்று தெரிந்தால், நீங்கள் எப்போதும் ஒருவித ஏக்கத்துடன் இருப்பீர்கள். அடிக்கடி கடந்த கால நினைவுகளை பற்றி யோசித்து, அவற்றைப் பற்றி ஆழமாக பகுப்பாய்வு செய்வீர்கள். எப்போதும் ஒருவித சிந்தனையுடன் இருப்பீர்கள். இதனால் நீங்கள் அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பீர்கள். இருப்பினும், நீங்கள் மிகவும் அக்கறையுள்ளவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications