Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
உங்க ராசிப்படி அக்டோபரில் உங்க செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? இந்த 4 ராசிக்காரங்களுக்கு மஜாதான்!
Love Horoscope for October 2023: காதல் மற்றும் உறவுகளுக்கு மிக முக்கியமான கிரகமான சுக்கிரன் அக்டோபர் 2 ஆம் தேதி சிம்ம ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் சிம்மத்தின் அதிபதியான சூரியனுடன் நல்ல உறவை பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த பெயர்ச்சி பலருக்கும் மங்களகரமான பலன்களை அளிக்கும்.
மகிழ்ச்சி மற்றும் திருவிழாக்களின் மாதமான அக்டோபர் பல ராசிக்காரர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சாதக மற்றும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் அக்டோபர் மாதம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் முதல் பதினைந்து நாட்களில் தங்கள் துணையுடன் நல்ல உறவை அனுபவிப்பார்கள். நீங்கள் பொதுவாக வாழ்க்கையில் உற்சாகமாக இருப்பீர்கள் மற்றும் படுக்கையில் சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சிங்கிளாக இருப்பவர்கள் மாதத்தின் முதல் பாதியில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள், மேலும் ஒரு ஆத்ம துணையைக் கண்டுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது. காதலில் உள்ள இருப்பவர்கள் மாதத்தின் இரண்டாம் பாதியில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் .
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஒட்டுமொத்தமாக நல்ல மாதமாக இருக்கும். தம்பதிகள் இந்த மாதம் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி அடைவார்கள். ஒரு மகிழ்ச்சியான பயணம் உங்கள் துணையுடன் உங்களை நெருக்கமாக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருப்பார்கள், குழந்தையை எதிர்பார்ப்பவர்கள் இந்த மாதம் அதற்கான முயற்சியைத் தொடங்கலாம்.
சிங்கிளாக இருப்பவர்கள் இந்த மாதம் மிகவும் பிஸியாக இருப்பார்கள் மற்றும் புதிய சுவாரஸ்யமான நபர்களை சந்திப்பார்கள். காதலில் இருப்பவர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல தொடக்கம் இருக்காது. சில கருத்து வேறுபாடுகள் வருத்தமளிக்கும், ஆனால் நீங்கள் கருத்து வேறுபாடுகளை சமாளித்து ஒரு இணக்கமான இரண்டாவது பதினைந்து நாட்களை அடைய வாய்ப்புள்ளது.
சிங்கிளாக இருப்பவர்கள் சமூகத்தில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பார்கள். அவர்கள் தங்களின் ஆத்ம துணையை மாதத்தின் இரண்டாம் பாதியில் சந்திக்க வாய்ப்புள்ளது. காதலில் இருப்பவர்களுக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில சிறிய வாக்குவாதங்கள் இருக்கலாம், ஆனால் மாதம் நகரும்போது, அது உங்கள் பிணைப்பை வலுப்படுத்தும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் மாதத் தொடக்கத்தில் சராசரி உறவைப் பெறுவார்கள். வழக்கமான உறவு முறைகளை உடைக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் பாலியல் வாழ்க்கையில் நீங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு நல்ல உடலுறவு பல முரண்பாடுகளை நீக்கிவிடும்.
சிங்கிளாக இருப்பவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது, மேலும் அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். காதலில் இருப்பவர்களும் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும், உங்கள் காதல் பிரிவதற்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நல்ல நட்புறவை அனுபவிப்பார்கள். நீங்கள் உங்கள் காதலின் சிறந்த நிலையில் இருப்பீர்கள், உங்கள் மனைவி கூடுதல் கவனிப்பையும், கவனத்தையும் விரும்புவார். உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மற்றும் உங்கள் உடலுறவும் சிறப்பான நிலையிலிருக்கும்.
சிங்கிளாக இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காதலி இருப்பவர்கள் காதலில் ஆழமாக விழுவார்கள் மற்றும் காதலை சொல்வதற்கு தயாராக இருப்பார்கள். எந்தவொரு உறுதிமொழியையும் செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். நீங்கள் இன்னும் சிறிது நேரம் எடுத்து உறுதியாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். தம்பதிகளிடையே ஈகோ வந்தால் அது உறவை அழித்துவிடும். இந்த சுக்கிர பெயர்ச்சி உங்களை அகங்காரமாக ஆக்கக்கூடும், எனவே எச்சரிக்கயாக இருக்க வேண்டும். மாதத்தின் பிற்பகுதி சுமுகமாக இருக்கும் மற்றும் நீங்கள் நல்ல செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
சிங்கிளாக இருப்பவர்கள் துணையின்றி தனிமையில் வருத்தப்பட வாய்ப்புள்ளது. தற்போது கிரக நிலைகள் காதலுக்கு சாதகமாக இல்லை. உங்கள் தனிமையை அனுபவித்து, சுய கவனிப்பில் கவனம் செலுத்துவதே அறிவுரை. காதலில் இருப்பவர்களும் மிகவும் மோசமான மற்றும் வாக்குவாதம் நிறைந்த உறவை அனுபவிப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவில் நல்லிணக்கமும் திருப்தியும் இல்லாதவர்களாக இருப்பார்கள். ஒரு நல்ல உறவுக்கு நிறைய முயற்சி தேவைப்படுகிறது. உங்கள் பணிச்சுமையால் உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கலாம். வேலையை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மற்றும் வைத்திருப்பது நல்லது.
சிங்கிளாக இருப்பவர்கள் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது. காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் குழப்பம் மற்றும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டில் அமைதியும், நல்லிணக்கமும் உண்டாகும். உங்கள் உறவில் மசாலா சேர்க்க நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்கள் நெருக்கத்தை மேம்படுத்துவதற்கு வேலை செய்யுங்கள்.
சிங்கிளாக இருப்பவர்கள் புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுடன் மகிழ்வதில் நம்பமுடியாத நேரத்தைக் கொண்டிருப்பார்கள். நேர்மையாக இருங்கள், நீங்கள் இல்லாததைக் காட்ட முயற்சிக்காதீர்கள். காதலில் உள்ளவர்கள் தங்கள் உறவில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்வார்கள். உங்கள் அன்பும் புரிந்துணர்வும் உங்களுக்கு தாம்பத்தியத்தில் நல்லிணக்கத்தை அளிக்கும், மேலும் உங்கள் நெருக்கம் அதிகரித்து, உங்களுக்கு அபரிமிதமான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.
சிங்கிளாக இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவரைக் கண்டுபிடிப்பார்கள், மேலும் அவர்களது உறவு வளர்ந்து மலரவும் தயாராக உள்ளது. காதலில் உள்ள பூர்வீகவாசிகள் தங்கள் துணையுடன் திருப்தியடைவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வெளிப்படையாகவும், கருத்துப் பரிமாற்றத்துடனும் இருக்க வேண்டும். நட்சத்திரங்கள் தம்பதிகளிடையே சில தவறான புரிதலை வெளிப்படுத்துகின்றன, இதன் விளைவாக ஒரு இறுக்கமான உறவு ஏற்படுகிறது. ஒரு நல்ல உறவு ஒரு வரம் போன்றது மற்றும் உறவை மென்மையாக்குவதற்கான முயற்சிகள் முக்கியம்.
சிங்கிளாக இருப்பவர்கள் தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் ஆக்ரோஷமாக ஒரு துணையைத் தேட மாட்டார்கள். காதலில் உள்ளவர்கள் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும்.
கும்பம்
தம்பதிகளிடையே சில கருத்து வேறுபாடுகளுடன் மாதம் தொடங்கும். நீங்கள் பிரச்சினைகளை முன்கூட்டியே சமாளிக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை படுக்கையறைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறுமையாக இருங்கள்.
சிங்கிளாக இருப்பவர்கள் தனிமையில் இருக்கலாம் மற்றும் அவர்களது உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலில் உள்ளவர்கள் தங்கள் உறவில் சில தடைகளை எதிர்கொள்வார்கள். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கலாம், ஆனால் நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நகராது.
மீனம்
மாதத்தின் தொடக்கத்தில் உங்கள் வாழ்க்கையில் சில ஒற்றுமைகள் ஏற்படக்கூடும். கருத்து வேறுபாடுகளை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றாக ஏற்ற தாழ்வுகளை கடந்து செல்வது ஒரு உறவை பலப்படுத்தும். மிகவும் நெருக்கமான உறவை நோக்கி நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும்.
மாதத்தின் பிற்பகுதியில், சிங்கிளாக இருப்பவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காதல் முன்மொழிவு உங்களுக்குக் கிடைக்கும். காதலில் உள்ளவர்கள் முதல் பதினைந்து நாட்களில் தங்களை நன்றாகவும் எச்சரிக்கையுடனும் நடத்த வேண்டும். மாதப் பிற்பகுதியில், விஷயங்கள் நன்றாகச் சரியாகி, உங்கள் துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.



Click it and Unblock the Notifications














