Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
October Horoscope 2023: அக்டோபர் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
October 2023 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் அக்டோபர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?
கீழே 12 ராசிக்காரர்களும் அக்டோபர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என அக்டோபர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இம்மாதம் சாதகமாக இருக்கும்.
நிதி ரீதியாக, இம்மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியாது. இருப்பினும் பணப்பற்றாக்குறை எதுவும் இருக்காது. ஆயினும் தேவையில்லாத செலவுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்று பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் வேலையைப் பொறுத்தவரை சற்று கடினமாக இருக்கும். கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். வணிகர்களின் வழியில் சில தடைகள் ஏற்படலாம். அரசு வேலை செய்பவர்களுக்கு திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.
இந்த மாதம் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பதில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க, நீங்கள் உங்கள் நடத்தையை மாற்ற வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் இருக்காது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் கடினமாக உழைத்தால் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி காண்பார்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது.
அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒருங்கிணைப்பு மேம்படும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப பிரச்சனைகள் இம்மாதத்தில் தீர்க்கப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழிலதிபர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் மிகவும் கவனமாக உங்கள் முடிவை எடுக்க வேண்டும். புதிய மற்றும் பெரிய முதலீடுகளை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.
அலுவலகத்தில் நடக்கும் அரசியலாலும் நீங்கள் சிரமப்படுவீர்கள். இதனால் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பீர்கள். உங்கள் வேலையை விடவும் முடிவு எடுக்கலாம். நிதி ரீதியாக இந்த மாதம் கலவையாக இருக்கும். மாதத்தின் நடுப்பகுதியில் திடீர் செலவுகள் அதிகரிக்கும். இதனால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் நீங்கள் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய வேலையைத் தொடங்கினால், அதில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
கிரக நிலைகளில் மாற்றம் ஏற்படுவதால், செலவுகள் அதிகரிக்கும். இதனால் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இம்மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்தும் கவலைப்படுவீர்கள். காதல் விஷயத்தில் இம்மாதம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தேவையற்ற மன கவலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் வேலையைப் பொறுத்தவரை சவாலானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தொழிலை விரிவுபடுத்த நினைத்தால் வெற்றி கிடைக்காமல் போகலாம். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். வருமானம் வருவதில் தடை ஏற்படும். தாம்பத்திய வாழ்வில் சூழ்நிலைகள் இயல்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் வேலை செய்பவர்களுக்கு கலவையானதாக இருக்கும். உங்களுக்கு அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இம்மாதத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சில புதிய வேலைகளையும் செய்யலாம்.
கூட்டு வணிகர்களுக்கு நன்றாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் செலவுகளுக்கும் வருமானத்திற்கும் இடையில் சமநிலையை பேணுங்கள். நிறைய பணத்தை சேக்க முடியும். வீட்டுச் சூழல் மன அழுத்தம் நிறைந்தததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தலரை, அமைதியின்மை, பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும். அவசரம் தீங்கு விளைவிக்கும்.
வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். தேவையில்லாமல் செலவழிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! அக்டோபர் மாதம் மிகவும் இனிமையானதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டைப் பெறும். முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
இம்மாதத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும். முதலீடுகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் பணம் சம்பாதிப்பதில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். வீட்டு செலவுகள் அதிகரிககும். கடன் வாங்கும் வாய்ப்புள்ளது. பண நெருக்கடியால் மனதில் பல எதிர்மறை எண்ணங்கள் எழலாம்.
வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் மிகவும் பரபரப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வீட்டில் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அடிக்கடி சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆடம்பரமாக செலவு செய்வது உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும்.
ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தமும் அதிகரிக்கும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறவில்லை என்றால், நீங்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் பணியிடத்தில் சில சவால்களை சந்திக்கலாம். ஆனால் அனைத்து பிரச்சனைகளையும் முழு தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். தொழிலதிபர்களுக்கு இம்மாதம் பரபரப்பாக இருக்கும். சில ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாத இறுதியில் குடும்பத்தினருடன் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பயணம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள்.



Click it and Unblock the Notifications











