Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
அக்டோபர் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்கப் போகுது..
October 2023 Career Horoscope In Tamil: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதத்தில் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் விரும்புவோம். ஒருவரது தொழில் வாழ்க்கை சிறப்பாக அல்லது மோசமாக இருப்பதெல்லாம் கிரகங்களின் நிலைகளில் தான் உள்ளன.

இந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் அடுத்தடுத்து ராசியை மாற்றுகின்றன. அதைத் தொடர்ந்து சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில் ராகு, கேது பெயர்ச்சி நிகழவுள்ளது.
இப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பதோடு, இன்னும் சில ராசிக்காரர்கள் மோசமான பலனைப் பெறலாம். இப்போது அக்டோபர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலனும், வெற்றியும் மாத இறுதியில் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெற அவசரப்படாமல் பொறுமையுடன், கடினமாக தொடர்ந்து உழைத்தால், அதற்கேற்ற பலனைப் பெறலாம். ஆனால் தொழில் ரீதியாக இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் உங்கள் தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் அதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாத இறுதியில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலைக்காக போட்டித் தேர்வுகளில் பங்கேற்றிருந்தால், அதில் நல்ல வெற்றியைக் இம்மாதத்தில் காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் புதிய தொழிலைத் தொடங்க நினைத்தால், அதற்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் தங்கள் நடத்தையால் அலுவலகத்தில் நற்பெயரைப் பெறுவார்கள். இதனால் சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். மொத்தத்தில் இந்த மாதத்தில் தொழிலில் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் நல்ல நிதி ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்தால், அதில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தில் தொழில் ரீதியாக எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக பயணங்களை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அமைதியைக் கடைப்பிடித்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். முக்கியமாக தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வேலையைப் பெற நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உங்கள் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படக்கூடும் என்பதால் அலுவலகத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் அலுவலகத்தில் வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்கள், அந்த தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். ஏதேனும் போட்டித் தேர்வுகளை எழுதியிருந்தால், முடிவுகளானது உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் மாத இறுதியில் தொழில் தொடர்பான நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! அக்டோபர் மாதத்தில் புதிய தொழிலை தொடங்க எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். படித்து முடித்தவர்கள் வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், பிடித்த வேலை எளிதில் கிடைக்கும். இம்மாதத்தில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நல்ல நிதி ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் விரும்பிய வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக சற்று கவலையை அளிப்பதாக இருக்கும். உங்கள் திறனுக்கு ஏற்றவாறு பணியிடத்தில் உங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு இம்மாதம் சற்று மந்தமாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் வேலை தொடர்பாக ஒரு பெரிய மற்றும் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். மேலும் சில பிரச்சனைகள் வந்து மிகுந்த நெருக்கடியைத் தரும். ஆனால் உங்கள் வேலையில் எவ்வளவு தடைகள் வந்தாலும், அதை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! அக்டோபர் மாதமானது தொழில் ரீதியாக சற்று பிஸியாக மற்றும் பரபரப்பாக இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றி பெற முடியாமல் போகும். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதனால் மாத இறுதியில் நிச்சயம் நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











