Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் உலகிலேயே சிறந்த நணபர்களாக இருப்பார்களாம்...உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: எண் கணிதம் என்று அழைக்கப்படும் பழங்கால பாரம்பரியத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதியைப் பொறுத்து அவர்க்ளின் குணங்களும், பண்புகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் ராசி பயன்படுத்தப்படுவது போல எண் கணிதத்தில் பிறந்த தேதி பயன்படுத்தப்படுகிறது.
வாழ்க்கையில் அனைவரும் விரும்பும் ஒரு உறவென்றால் அது நண்பர்கள்தான். நல்ல நண்பர்கள் கிடைப்பது வாழ்க்கையில் கிடைக்கும் மிகப்பெரிய வரமாகும். எண்கணித நம்பிக்கைகளின்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ஆதரவானவர்களாகவும், அன்பான நண்பர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களை கண்ணை மூடிக்கொண்டு வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் நம்பலாம். இந்த பதிவில் எந்தெந்த தேதியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
எண் 9
நியூமராலஜியின் படி எண் 9 கருணை, கொடுப்பது மற்றும் பச்சாதாபமான நடத்தை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த எண்ணில் பிறந்தவர்கள் எல்லா தரப்பு நண்பர்களையும் ஈர்க்கிறார்கள்.
இந்த எண் திறந்த மனதுடன் மற்றவர்களின் வேறுபாடுகளையும், குறைகளையும் ஏற்றுக்கொள்வதுடன் தொடர்புடையது, இது பலதரப்பட்ட மக்களுக்கு அவர்களை பிடித்தவர்களாக மாற்றுகிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் உள்ளார்ந்த வசீகரம் மற்றும் கவர்ச்சியை கொண்டுள்ளனர், அது அவர்களை சிறந்த உலகின் சிறந்த நண்பர்களில் ஒருவராக மாற்றுகிறது.
எண் 6
நியூமராலஜி படி 6 என்ற எண்ணில் பிறந்தவர்கள் ஆழமான மற்றும் நீடித்த நட்பை உருவாக்கலாம், இது வளர்ப்பு, அன்பு மற்றும் பொறுப்புணர்வின் வலுவான உணர்வு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாகவும், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த நல்ல குணங்கள் அவர்களை வழிகாட்டுதல் மற்றும் புரிதலை வழங்கும் சிறந்த நண்பர்களாக மாற்றுகிறது. இந்த நாளில் பிறந்தவர்கள் நம்பகமான மற்றும் விசுவாசமான நண்பர்களாக இருப்பார்கள், எந்த சூழ்நிலையிலும் தங்கள் அன்புக்குரியவர்களை ஆதரிக்கிறார்கள்.
எண் 21
எந்த ஒரு மாதத்திலும் 21 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நண்பர்கள் இருப்பதாக எண் கணிதம் கூறுகிறது. லட்சியம் மற்றும் இராஜதந்திரத்தை குறிக்கும் எண்கள் 2 மற்றும் 1 இன் குணங்களின் கலவையானது, 21 இல் ஆழமான உறவுகளை உருவாக்கும் திறனை அதிகரிக்கிறது.
இந்த நபரின் லட்சியம் மற்றும் இலக்கு சார்ந்த இயல்பு அவர்களின் சொந்த இலட்சியங்களைத் தொடர அவர்களின் நண்பர்களை ஊக்குவிக்கிறார்கள். இந்த நாளில் பிறந்த நபர்கள் சிறந்த தொடர்பு திறன்களைக் கொண்டுள்ளனர், இது மற்றவர்களுடன் வலுவான தொடர்புகளை எளிதாக்குகிறது, மேலும் அவர்களுடன் அனைவரையும் நண்பராக பழக விரும்பத் தூண்டுகிறது.
எண் 18
எண் கணிதத்தின் படி, அனைத்து மாதத்திலும் 18 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு பல நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எண்கள் 1 மற்றும் 8 ஐ இணைத்து, எண் 18 தலைமைப் பண்புகளை ஒரு வலுவான பொறுப்புணர்வுடன் இணைக்கிறது, இது மற்றவர்களுடன் பழகும் திறனை அதிகரிக்கிறது.
இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் நண்பர்களின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை ஊக்குவிப்பவர்களாகவும், ஆதரவளிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் நண்பராக இருக்க அனைவரும் காத்திருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












