Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
Numerology: உங்களோட பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்ட ஆளு-ன்னு சொல்றோம்...
Numerology: ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் தோன்றிய தேதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படும் எண் கணிதத்தில் 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும்.
இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில் அந்நபர் எப்படிப்பட்ட நபர் என்பதை புரிந்து கொள்ள உதவும். என்ன தான் நமக்கு நம்மைப் பற்றி தெரிந்தாலும், எப்போதும் நம்மை முழுமையாக நாம் அறிந்து கொள்வதில்லை.

நம்மை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் பிறருடைய கண்ணோட்டத்தில் இருந்து நம்மை நாம் பார்க்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் பார்க்கமாட்டோம். நீங்கள் உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் எந்த மாதிரியான நபர் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.
உங்கள் பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்,
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் லட்சியவாதிகள் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். இலக்கை அடைய கடுமையாக உழைப்பீர்கள். கடின உழைப்பு ஏற்ற பலன் உடனே கிடைக்காவிட்டாலும், நிச்சயம் வெற்றி அடைந்துவிடுவீர்கள். எதிலும் அதிக ஆர்வம் காட்டமாட்டீர்கள். பலரும் உங்களை மிகவும் தீவிரமானவர் என்றும், யாருடனும் அதிகம் பேசமாட்டீர்கள் என்றும், சுயநலவாதி என்றும் நினைப்பார்கள். அதற்கேற்ப உங்களின் நடத்தையும் இருக்கும். இந்த உலகில் உங்களை புரிந்து கொள்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பர்.
உங்கள் பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நேர்மையான நபர். மிகவும் நேர்மையாக இருப்பதால் பல ஆபத்துக்களை சந்திப்பீர்கள். எவ்வளவு ஆபத்துக்களை சந்தித்தாலும் இன்னும் நேர்மையாகவே இருப்பீர்கள். மற்றவர்களை உங்களை நம்பிக்கையான நண்பராக நினைப்பார்கள். அனைவருமே உங்களை எளிதில் நம்புவார்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப உங்களின் நடத்தையும் இருக்கும். மிகவும் வேடிக்கையான நபர். உங்களின் எண்ணங்கள் மற்றவர்களை விட வேறுபட்டிருக்கும்.
உங்கள் பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுயநலம் கொண்டவர்கள். ஆனால் நீங்கள் எப்போதும் நன்கு சிந்தித்து சரியான முடிவையே எடுப்பீர்கள். நீங்கள் ஒரு புத்திசாலித்தனமா சிந்தனையாளர் என்று பலரும் நினைப்பார்கள். இருப்பினும் உங்கள் முடிவை பலரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கும்.
உங்கள் பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்
நீங்கள் ஒரு யதார்த்தவாதி. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நபர் மற்றும் நட்பானவர். உங்களின் எண்ணங்கள் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். நடக்கவிருக்கும் விஷயங்களை முன்பே கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். பலர் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு விலகிச் செல்வார்கள். நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது பலருக்கு புரியாது. உங்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கமாட்டார்கள்.
உங்கள் பிறந்த தேதி 5, 14, 23 என்றால்,
நீங்கள் மிகவும் வித்தைக்காரர். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். சுந்திரமாக செயல்படுபவர்களை விரும்புவீர்கள் மற்றும் நீங்களும் சுதந்திரமாகவே செயல்படுவீர்கள். அனைவரும் உங்களுடன் உடன்பட வேண்டும் என்று எப்போதும் விரும்புவீர்கள்.
உங்கள் பிறந்த தேதி 6, 15, 24 என்றால்,
நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான நபர், அதே சமயம் சென்சிடிவ்வான நபரும் கூட. அனைவருக்கும் உங்களைப் பிடிக்கும். உங்களின் நேர்மை மற்றும் அன்பான நடத்தை காரணமாக அனைவரும் உங்களுடன் பழக விரும்புவார்கள். நீங்கள் எப்போதும் அதிகமாக சிந்திப்பீர்கள். அன்பினால் அனைத்தையும் வெல்வீர்கள்.
உங்கள் பிறந்த தேதி 7, 16, 25 என்றால்
நீங்கள் எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள். பிரச்சனைகளை பேசி தீர்த்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டவர். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்தாலும், அவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பீர்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதை சமாளிக்கும் திறன் கொண்டிருப்பீர்கள்.
உங்கள் பிறந்த தேதி 8, 17, 26 என்றால்
நீங்கள் அதிகம் பயணம் மேற்கொள்ள விரும்புவீர்கள். எதையும் வெளிப்படையாக பேசுவதால், பலருக்கு உங்களைப் பிடிக்காது. ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களுக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். உங்கள் மூளையும் எண்ணங்களும் எல்லோரிடமிருந்தும் வித்தியாசமாக இருக்கும். எப்போதும் வித்தியாசமாக யாரும் எதிர்பாராத வகையில் சிந்திப்பீர்கள்.
உங்கள் பிறந்த தேதி 9, 18, 27 என்றால்
நீங்கள் மிகவும் விசுவாசமான நபர். வாழ்க்கையை கடவுள் கொடுத்த வரம் என்று நினைப்பீர்கள். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள். நீங்கள் விரும்பும் அனைத்தையும் நிச்சயம் பெறுவீர்கள். உங்கள் மனம் கூறுவதைக் கேட்டு நடப்பீர்கள். நீங்கள் காட்டும் வழியை பலர் பின்பற்றுவார்கள்.



Click it and Unblock the Notifications