Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Numerology: உங்க பெயரில் எத்தனை எழுத்துக்கள் இருக்குனு சொல்லுங்க... உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம்...!
Numerology: நமது பெயர் என்பது நம்முடைய அடையாளம் மட்டுமல்ல, அது நம் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் திறவுகோலாகவும் உள்ளது. நம்முடைய பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் எண் கணிதத்தில் ஒரு அர்த்தம் உள்ளது, அதேசமயம் நம் பெயரில் எத்தனை எழுத்துகள் உள்ளது என்பதற்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் உள்ளது.
நம் பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையில் நம் வாழ்க்கை மற்றும் ஆளுமை பற்றிய குறிப்புகள் உள்ளன, இது நாம் யார் என்பதை நிர்ணயிப்பதில் முக்கியமானதாகும். ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தின் அடிப்படையில் மூன்று முதல் பத்து வரையிலான உங்கள் பெயரின் எழுத்துக்களின் அர்த்தங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

3 எழுத்துக்கள்
உங்கள் பெயரில் மூன்று எழுத்துக்கள் மட்டுமே இருந்தால், நீங்கள் சுறுசுறுப்பான மற்றும் கற்பனையான ஆளுமை உடையவர். உங்கள் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக நீங்கள் ஒரு எப்படிப்பட்ட சிக்கலையும் தீர்க்கும் ஆளுமை உடையவராக இருப்பீர்கள். மூன்றெழுத்து பெயர்களைக் கொண்ட நபர்கள் வெளிப்படையானவர்களாகவும், எளிதில் தொடர்புகள் மற்றும் நட்பை உருவாக்குபவராகவும் கருதப்படுகிறீர்கள்.
4 எழுத்துக்கள்
நியூமராலஜியின் படி நான்கு எழுத்து பெயர் என்பது கடமையுணர்வு மற்றும் வலுவான ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. நீங்கள் பொதுவாக நம்பகமானவர், விவேகமானவர் மற்றும் பணிவானவர். மற்றவர்கள் உங்கள் புத்திசாலித்தனத்தையும், பணிவையும் மதிக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்வது சிறந்தவர்கள்.
5 எழுத்துக்கள்
ஐந்தெழுத்து பெயர் சுதந்திரத்திற்கான ஆர்வத்தையும் சாகசத்திற்கான வேட்கையையும் குறிக்கிறது. நீங்கள் புதிய விஷயங்களை முயற்சிக்க ஆர்வமாக உள்ளீர்கள் மற்றும் இயல்பாகவே அனைத்து விஷயத்தின் மீதும் ஆர்வமாக உள்ளீர்கள். ஐந்தெழுத்து பெயர்களைக் கொண்ட நபர்கள், பலவிதமான தடைகளை கடக்கக்கூடிய, நெகிழ்வான மற்றும் தகவமைப்பு கொண்டவர்களாக மதிக்கப்படுகிறார்கள்.
6 எழுத்துக்கள்
உங்கள் பெயரில் ஆறு எழுத்துக்கள் இருந்தால் அது நீங்கள் ஒரு கனிவான மற்றும் உணர்திறன் கொண்ட நபர் என்பதைக் குறிக்கிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். உங்கள் அரவணைப்பு மற்றும் உணர்திறன் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கிறது, இது உங்களை ஒரு சிறந்த நம்பிக்கைக்குரியவராகவும், நண்பராகவும் மாற்றுகிறது.
7 எழுத்துக்கள்
ஏழு எழுத்துக்கள் உள்ள பெயர்கள் கற்றுக்கொள்வதற்கான வலுவான விருப்பத்தையும் உண்மையைத் தேடுவதையும் குறிக்கின்றன. நீங்கள் ஒரு சிந்தனைமிக்க, பகுப்பாய்வுடைய நபர், நீங்கள் எப்போதும் வாழ்க்கையின் புதிர்களைத் தீர்க்க முயற்சிக்கிறீர்கள். ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுய கண்டுபிடிப்பு பயணத்தில் உங்கள் கூர்மையான உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவை பின்பற்றி நீங்கள் வெற்றியை அடைவீர்கள்.
8 எழுத்துக்கள்
எட்டு எழுத்து பெயர்களைக் கொண்ட நபர்கள் பொதுவாக சுய உந்துதல் மற்றும் அதீத ஆர்வமுள்ளவர்கள். நீங்கள் இயற்கையாகவே சூழ்நிலைகளின் தன்மையை புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் சிறந்த தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விடாமுயற்சியும் உறுதியும் கொண்டவராக இருந்தால் பொதுவாக உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
9 எழுத்துக்கள்
ஒன்பது எழுத்துக்கள் கொண்ட பெயர் இரக்கத்தின் வலுவான உணர்வையும் உலகை மேம்படுத்துவதற்கான விருப்பத்தையும் குறிக்கிறது. மக்களுக்கு உதவவும் சூழலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உங்களின் விருப்பம்தான் உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் தன்னலமற்ற நடத்தை மற்றும் மக்களை உயர்த்தும் திறனின் காரணமாக நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பீர்கள்.
10 எழுத்துக்கள்
உங்கள் பெயர் பத்து எழுத்துக்கள் நீளமாக இருந்தால், நீங்கள் தெளிவான நோக்கத்துடன் இருப்பீர்கள் மற்றும் உயர்ந்த இலக்குகளைக் கொண்ட ஒரு தொலைநோக்கு பார்வை உடையவர். பரந்த அளவில் சிந்திக்கவும், உங்கள் கருத்துக்களை உயிர்ப்பிக்கவும் உங்களுக்கு திறன் உள்ளது. உங்கள் விடாமுயற்சி மற்றும் ஆர்வம் ஆகியவற்றின் காரணமாக நீங்கள் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












