Latest Updates
-
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்!
நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்கள பத்தின சில ரகசியங்களை நாங்க சொல்றோம்...
Numerology In Tamil: உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கும். இந்த குணங்கள் தான் ஒருவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகின்றன. மேலும் இதே குணங்கள் தான் ஒருவருக்கு பலமாகவும், பலவீனமாகவும் உள்ளன.
ஒருவரது உண்மையான குணாதியங்களை பல வழிகளில் அறியலாம். அதுவும் ஜோதிடத்தின் ஒரு கிளையான எண்கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டே அவரது பலம் என்ன, பலவீனம் என்னவென்பதை அறியலாம்.

எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டு தொகையின் ஒற்றை இலக்க எண்களாகும். நீங்கள் உங்கள் பிறந்த தேதியின் படி, உங்களின் பலம், பலவீனம் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணின் அதிபதி சூரியன். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு:
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தாங்கள் தொடங்கிய ஒரு வேலையை முடிக்காமல் விடாமாட்டார்கள்.
* இவர்கள் இயற்கையாகவே சுதந்திரமாக செயல்படுவார்கள்.
* ஆக்கப்பூர்வமான சிந்தனையைக் கொண்டவர்கள்.
* மிகவும் பொறுப்பானவர்கள் மற்றும் அன்பானவர்கள்.
* இவர்கள் நம்பகமானவர்கள். இவர்களிடனம் ஒரு வேலையை நம்பி ஒப்படைத்தால், அதை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
பலவீனம்
* சில சமயங்களில் இவர்கள் ஒரு முதலாளி போன்று அதிகாரம் செய்து நடப்பார்கள். இது பலருக்கும் பிடிக்காத பண்பு மற்றும் இதுவே இவர்களை தனிமைப்படுத்தும்.
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் நோக்கம் அல்லது வேலை முடிந்தவுடன், அதற்கு உதவியவர்களை வாழ்க்கையில் இருந்து விலக்கிவிடுவார்கள்.
* இவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணின் அதிபதி சந்திரன். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு:
பலம்:
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இந்த குணம் மற்றவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளவும், அவர்களுடன் ஒரு நல்ல பிணைப்பை உருவாக்கவும் உதவுகிறது.
* இவர்கள் அனைத்தையும் ஒழுங்காக செய்யக்கூடியவர்கள்.
* இவர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்பாதவர்கள்.
* மிகவும் ரொமான்டிக்கானவர்கள்.
* மற்றவர்களை எளிதில் மன்னிக்கக்கூடியவர்கள்.
பலவீனம்
* இவர்கள் குறைவான தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
* ஒரு பிரச்சனையை சந்தித்தால், அந்த பிரச்சனையை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, நீண்ட காலம் அமைதியற்று இருப்பார்கள்.
* மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இதனால் மற்றவர்கள் சிறிது திட்டினாலும், அவர்களின் உறவை எளிதில் முறித்துக் கொள்வார்கள்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
பலம்
* மற்றவர்களுடன் மிகவும் சிறப்பாக பேசக்கூடியவர்கள். தங்களின் எண்ணங்கள், யோசனைகளை சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்கள்.
* கலை, இசை, பெயிண்ட்டிங், படைப்பாற்றல் போன்றவற்றில் சிறந்தவர்களாக இருப்பர்.
* மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் காந்த ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். இலகிய மனதைக் கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களை நன்கு தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டவர்கள். தங்களை சுற்றியிருப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
* இவர்களின் நம்பிக்கையை மாற்றுவது என்பது முடியாத ஒன்று. இவர்கள் தங்களைத் தாங்களே ஊக்குவிப்பார்கள் மற்றும் ஒரு வேலையை செய்ய முயற்சித்தால், அதை செய்து முடிக்காமல் விடமாட்டார்கள்.
* உலகைப் பற்றிய பிரகாசமான கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதையும் சந்தேகிக்க மாட்டார்கள் மற்றும் மற்றவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் மிகவும் மென்மையான நம்பிக்கையான இயல்புடையவர்கள்.
* பார்க்கும் அனைத்தைக் கண்டும் அதிகம் உற்சாகமடையக்கூடியவர்கள் மற்றும் ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனத்தை செலுத்தமாட்டார்கள். எளிதில் மற்றவர்களால் திசைத்திருப்பப்படுவார்கள்.
* இவர்கள் எதிர்மறை எண்ணங்களை அதிகம் கொண்டவர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இவர்கள் யதார்த்தத்தை புரிந்து நடந்து கொள்வார்கள்.
* மிகவும் நேர்மையானவர்கள், நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள், சக்தி வாய்ந்தவர்கள், ஒழுக்கமானவர்கள். ஒரு வேலையை முறையாக செய்து முடிப்பார்கள்.
* இவர்கள் கடின உழைப்பாளிகள். எதையும் எளிதில் கைவிடமாட்டார்கள்.
* புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். ஒரு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பார்கள்.
* ஒரு விஷயத்தை பல கோணங்களில் யோசித்து செய்யக்கூடியவர்கள். இவர்களின் கருத்துக்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு வேறுபட்டிருக்கும்.
* ஒரு விவாதங்களின் போது தங்களுக்கு எதிரான கருத்துக்களையும், குறுக்குக் கேள்விகளையும் வைக்கத் துணிவார்கள்.
பலவீனம்
* மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்றவர்கள்.
* விரைவில் கோபப்படுவார்கள் மற்றும் அதிக ஈகோ கொண்டவர்கள். இவர்களை ஒரு விஷயத்தை நம்ப வைப்பது என்பது எளிதானதல்ல.
* இவர்களின் தீவிரமான அணுகுமுறையால், பல சமயங்களில் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். இவர்கள் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளமாட்டார்கள்.
* இவர்களின் அகங்காரம் மற்றும் ஆக்கிரோஷ குணத்தால் பல எதிரிகளை உருவாக்குவார்கள்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் புதிய அனுபவங்களைப் பெற விரும்புவார்கள். தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.
* தைரியசாலிகள் மற்றும் ஊக்கம் கொண்டவர்கள். தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
* புதிய விஷயங்களை ஆராய்வதிலும் கண்டுபிடிப்பதிலும் ஆர்வம் கொண்டதால், மக்களுடன் பழகுவதற்கும், சூழலுக்கு ஏற்ப மாற்றுவதற்கும் தயங்கமாட்டார்கள். ஒரு விஷயத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை தவறவிடமாட்டார்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நம்பகமானவர்களாக இருக்கமாட்டார்கள்.
* இவர்கள் தங்களின் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். போக்கில் வாழ்க்கையை வாழ்வார்கள். இதனால் இவர்கள் வாழ்வில் வளர்ச்சியைக் காண முடியாமல் போகும்.
* எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் இஷ்டத்திற்கு ஏற்பட திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பது, இவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடையாக இருக்கும். இது இவர்களின் மிகப்பெரிய பலவீனம்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு:
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த கவை மற்றும் ஃபேஷன் சுவையைக் கொண்டிருப்பார்கள்.
* மிகப்பெரிய மற்றும் தாராள இதயத்தைக் கொண்டவர்கள்.
* கவர்ச்சிகரமான மற்றும் அழகான அனைத்தும், இவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது தொடர்ந்து உங்கள் பக்கத்தில் இருப்பார்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் தங்களைப் பயன்படுத்திக் கொள்வதை தாமதமாகவே புரிந்து கொள்வார்கள்.
* இவர்களால் தனியாக எதையும் செய்ய முடியாது மற்றும் இருக்க முடியாது. எப்போதும் ஒரு தோழமையைத் தேடுவார்கள்.
* இவர்கள் வாழ்வில் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்றால், அது மற்றவர்களிடம் முடியாது என்ற வார்த்தையை சொல்வது தான். ஏனெனில் யார் வந்து எதை கேட்டாலும், அதை முடியாது என்று சொல்லாமல் செய்வார்கள். இதனால் பல பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்களின் புத்திசாலித்தனமான மனம் மற்றும் கூர்மையான புத்தி போன்றவை எல்லோரையும் மிஞ்சும். அதாவது, ஒரு விஷயத்தில் ஈடுபடும் போது, உங்கள் படைப்பாற்றல் மற்றும் புதுமையின் காரணமாக உங்கள் செயல்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். உங்களின் யோசனைகள் தனித்துவமானவையாக இருக்கும்.
* ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருக்கும்.
* நீதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் எல்லாவற்றையும் நியாயமாக செய்ய நினைப்பீர்கள். உங்கள் வாழ்க்கையை வாழ நீங்கள் ஒரு வழக்கத்தைப் பின்பற்றுவீர்கள் மற்றும் அது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.
* மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வீர்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை, ஆசைகளை வெளிப்படையாக கூறாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள். இதன் காரணமாக, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உண்மையான உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் போகும். இதன் மூலம் மற்றவர்கள் உங்களை விட்டு விலகி போகலாம்.
* உங்களுடன் இருப்பவர்களிடம் உங்களின் உண்மையான சுயரூபத்தைக் காட்டினால், உங்களுடன் இருக்க மற்றவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் மற்றும் உங்களை தெரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் இதோ.
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் எதையும் நன்கு புரிந்து, அமைதியாக செய்வது தான். இவர்கள் எப்போதும் எதையும் அவசரமாக செய்யமாட்டார்கள். இந்த ஒரு குணமே இவர்களை பல பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றுகிறது.
* கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தான் இவர்களை வாழ்க்கையில் ஒரு வலிமையான நிலைக்கு கொண்டு வந்துள்ளன.
* ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கும் போது, அந்த காரியம் திட்டமிட்டபடி நடக்காவிட்டால், அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மனதில் இரண்டாவதாக ஒரு திட்டத்தை வைத்திருப்பீர்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாவற்றிலும் தலைவராக இருக்க விரும்புவதால், ஒருவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டியிருக்கும் போது, கடினமாக இருக்கும்.
* சுயநீதி உணர்வைக் கொண்டிருப்பதால், உங்களுக்குத் தெரிந்ததை உண்மையாக நம்புவீர்கள். உங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களை எதிர்ப்பீர்கள். இந்நிலையில் சதிக்கு பலியாவீர்கள்.
* நீங்கள் மற்றவர்களை விட முதிர்ச்சியடைந்தவராகவும், நிலைத்தன்மை உடையவராகவும் இருப்பதால், உங்களுடன் உறவில் இருப்பது கடினமாகவும் சில சமயங்களில் சலிப்பாகவும் இருக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பலம் மற்றும் பலவீனம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
பலம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் தேசியவாதிகள். தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட கடமைகளை திறம்பட சமன் செய்வார்கள்.
* நேர்மையானவர்கள், இரக்கமுள்ளவர்கள், அன்பான ஆளுமையைக் கொண்டவர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நம்பமுடியாத அளவிற்கு அன்பாக இருப்பார்கள்.
* எளிதில் மற்றவர்களுடன் பழகுவார்கள். வலுவான உணர்திறன்களை கொண்டவர்கள். பிடித்த விளையாட்டுகளைப் பார்ப்பது மற்றும் பங்கேற்பது என இரண்டையும் விரும்புவார்கள்.
* ஆற்றல்மிக்கவர்கள் மற்றும் உற்சாகமானவர்கள். கண்ணியம், நற்பெயர் மற்றும் விசுவாசத்தை அனைத்திற்கும் மேலாக முதன்மைப்படுத்துவார்கள்.
பலவீனம்
* இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கு அவர்களின் சர்ச்சைக்குரிய நடத்தை தான் காரணம்.
* ஆக்கிரோஷமான குணத்தை கொண்டிருப்பதால், விரைவில் கோபப்பட்டு யோசிக்காமல் மற்றவர்களை தாக்குவார்கள்.
* மற்றவர்களின் குறைகளைக் கண்டறிந்து அவர்களை விமர்சிக்க விரும்புவார்கள். மேலும் இவர்களின் சந்தேக மனப்பான்மை மற்றவர்களை எளிதில் நம்பவிடாது.
* முக்கியமாக தங்கள் எதிரிகளை பழிவாங்க மறக்க மாட்டார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











