Latest Updates
-
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
நியூமராலஜி படி இந்த 4 தேதில பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை ரொம்ப மோசமா இருக்குமாம்... உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: நியூமராலஜி ஒருவரின் ஆளுமையையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்க உதவும் பழமையான சாஸ்திரமாகும். அதுமட்டுமின்றி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய கணிப்புகளையும் தெரிந்து கொள்ள நியூமராலஜி உதவும். ஒருவரின் திருமணம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்திற்கான தொடக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
திருமணம் என்பது வெற்றிகரமான குடும்பத்தை உருவாக்குவதற்கு இரண்டு தனிநபர் இணைவதை குறிக்கிறது என்பதால், திருமணம் மிகவும் புனிதமான உறவாக மதிக்கப்படுகிறது. நம் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு எண்ணுடனும் தொடர்புடைய ஒரு கிரக ஆற்றல் உள்ளது. இது நம் திருமணம், உறவுகள் மற்றும் காதல் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எண்கணித நம்பிக்கைகளின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் திருமணத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமண சிக்கல்களை சந்திப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
எண் 1 (அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை மோசமாக நடத்தலாம் அல்லது திருமண வாழ்வில் வரும் பொறுப்புகளை ஏற்க மறுக்கலாம். அவர்களின் திருமண உறவு அவர்களுக்கு கஷ்டமாகவும், எரிச்சலாகவும் இருக்கலாம்.
தங்கள் வாழ்க்கைத்துணையுடன் எதையும் பேசுவதற்கு முன், அவர்கள் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனைத்து விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் மற்றும் அவர்களை காதலிக்க ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது, இதனால் அவர்களின் உறவில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படும்.
எண் 4 (அனைத்து மாதத்திலும் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதியில் பிறந்தவர்கள் பாலியல் திருப்திக்காக, அவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு வெளியே அதிக உறவுகளைக் கொண்டுள்ளனர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் உறவில் எப்போதும் முன்னணியில் உள்ளனர்.
அவர்கள் பக்தியுடனும் விசுவாசத்துடனும் இருப்பது போல தங்கள் வாழ்க்கைத்துணையிடம் நடிப்பதால் அவர்களது திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு குறுகிய மனநிலையும் உள்ளது, இது அவர்களின் உறவைப் பாதிக்கிறது, இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விவாகரத்துக்கு வழிவகுக்கும்.
எண் 6 (அனைத்து மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் எதிர் பாலினத்தாரை தங்களை நோக்கி இழுக்க முனைகிறார்கள். இதனால் அவர்கள் அடிக்கடி திருமணத்திற்கு வெளியே தொடர்புகளை உருவாக்கு விரும்புகிறார்கள், இது அவர்களின் வாழ்க்கைத்துணையுடன் உணர்ச்சிரீதியாக இணைந்திருக்க அனுமதிக்காமல் மோதல் மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும். இது அன்பு மற்றும் அமைதியின் எண்ணாக இருந்தாலும், அவர்கள் உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் இணக்கமாக இருப்பது முக்கியம்.
எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்களில் பிறந்தவர்கள் மக்கள் எப்போதும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க விரும்புகிறார்கள் மற்றும் தங்கள் திருமண உறவில் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கிறார்கள். அவர்கள் உணர்திறன் உடையவர்கள், ஆனால் பெரும்பாலான நேரங்களில், மற்றவர்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.
அவர்களைப் பொறுத்தவரை, ஒரு காதல் உறவில் உடலுறவு என்பது அனைத்தையும் விட முக்கியமானது. மேலும், அவர்கள் பாலியல் நோக்கங்களுக்காக திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபடுகிறார்கள், இது அவர்களின் திருமண வாழ்க்கையில் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
