Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
இந்த 3 தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருளால் நிறைய பணத்தை சாம்பாதிக்கும் திறமையை கொண்டவங்க..
Numerology In Tamil: நமது வாழ்க்கையில் எண்கள் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் சில எண்ணெய் சிலருக்கு அதிர்ஷ்டத்தையும், சில எண்கள் துரதிர்ஷ்டத்தையும் தருவதைக் கண்டிருப்பீர்கள்.
இப்படி எண்கள் ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தை கணித்து கூறும் ஜோதிடம தான் நியூமராலஜி அல்லது எண் கணிதம். இந்த எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு 1-9 வரையிலான எண்கள் உள்ளன. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த 1-9 எண்களுக்குள் ஒரு எண்ணிற்கு சொந்தமானவர்கள்.

நியூமராலஜியின் படி, இந்த 1-9 வரையிலான எண்களுக்கு அதிபதிகள் உள்ளன. அந்த அதிபதிகளைப் பொறுத்தே, அந்த எண்ணிற்கு உரியவர்களின் குணாதிசயங்கள் இருக்கும் என எண் கணிதம் கூறுகிறது. அந்த வகையில் விதி எண் 6-க்கு உரியவர்களைப் பற்றி தான் இப்போது இக்கட்டுரையில் காணவுள்ளோம்.
விதி எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்கள். இவர்கள் கலைத் துறை, இசைத் துறை மற்றும் நடிப்புத் துறைகளில் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார்கள். இந்த துறையில் இவர்கள் வேலை செய்தால் உலகளவில் பிரபலமாக வாய்ப்புள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவார்கள்.
நிறைய பணம் சம்பாதிப்பார்கள்
நியூமராலஜியின் படி, விதி எண் 6-க்கு உரியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்ல பெயரையும், புகழையும் பெறுவார்கள். ஆனால் இதற்கு இவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்பும் இவர்கள், தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுமே நல்ல பிராண்ட்ட் பொருளாக இருக்க ஆசைப்படுவார்கள். இவர்களின் பொழுதுபோக்குகள் கூட சாதாரண ஒன்றாக இருக்காது.
ரொமான்டிக்கானவர்கள்
விதி எண் 6-ஐ சேர்ந்தவர்கள் இயற்கையாகவே மிகவும் ரொமான்டிக்கானவர்கள். காதலிப்பதில் கைத்தேர்ந்தவர்கள். காதல் மழையில் நனைய வைப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் கவர்ச்சியைக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இசை, நடனம், நடிப்பு ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்ள விரும்புவார்கள். மொத்தத்தில் நல்ல ஜாலியான நபர்கள்.
நற்பெயரை சம்பாதிக்கக்கூடியவர்கள்
எண் கணிதத்தின் படி, விதி எண் 6-க்கு உரியவர்கள் இசை, கலை, ஃபேஷன் டிசைனிங் போன்ற துறைகளில் நல்ல பெயரை சம்பாதிக்கக்கூடியவர்கள். வியாபாரத்தைப் பொறுத்தவரை, இவர்கள் எப்படி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்களோ, அதேப் போல் ஆடம்பரமான பொருட்களை வியாபாரம் செய்தால், வாழ்க்கை செழிப்பாக இருக்கும். அதாவது, தங்கம், வெள்ளி வைரம், துணி வியாபாரம் போன்றவற்றை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications