நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம்... உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?

Numerology: எண்கள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை விலகும் ஒரு புதிரான ஆன்மீக நெறிமுறைதான் எண் கணிதம். வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்திற்கான நமது திறனை தீர்மானிப்பதில் எண் கணிதம் பயனுள்ளதாக இருக்கும். ஜோதிடம் ஒருவரின் பிறந்த ராசியை வைத்து எதிர்காலத்தை கணிப்பது போல நியூமராலஜி ஒருவரின் பிறந்த தேதியை வைத்து அவர்களின் எதிர்காலத்தைக் கணிக்கிறது.

பிறந்த தேதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய எண் அதிர்வுகளை ஆராய்வதன் மூலம் நிதி வெற்றிக்கு வழிவகுக்கும் வழிகளை நியூமராலஜி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். எண்கணித நம்பிக்கைகளின்படி எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் செழிப்புடன் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Numerology People Born On These Dates Are Born to Earn Money in Tamil

எண் 1 (அனைத்து மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதியில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் எண்ணியல் அதிர்வுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறந்த தொழில் முனைவோராக இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்த தொழில்முனைவோரின் விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் புத்திசாலித்தனமான யோசனைகள் ஆகியவை இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இவர்களின் புத்திசாலித்தனமே இவர்களுடைய வெற்றிக்கான மூலதனமாக இருக்கும்.

எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீக ஞானம், இரக்கம் மற்றும் பரோபகார ஆற்றல்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களின் முன்னுரிமைகள் எப்போதும் பணம் சார்ந்ததாக மட்டுமே இல்லாவிட்டாலும், மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காக பொதுவாக தங்கள் திறனை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

அவர்களின் அன்பான மனப்பான்மையும் மற்றவர்களுக்கு உதவும் விருப்பமும் அவர்களின் வாழ்க்கையில் பணத்தை நோக்கி அவர்களை ஓட வைக்கும். இவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எப்போதும் மற்றவர்களின் நன்மைகளுக்காக பயன்படுத்துகின்றனர்.

எண் 8 (அனைத்து மாதத்திலும் 8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)

இந்த தேதியில் பிறந்தவர்கள் செழிப்பு, அதிகாரம் மற்றும் அளவில்லா செல்வம் ஆகியவற்றின் ஆற்றலைக் கொண்டுள்ளனர். அவர்கள் அடிக்கடி பணப் பிரச்சினைகளை எளிதில் கையாளும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர்.

அவர்களின் எதார்த்த குணம் மற்றும் இலக்கின் மீது வலுவான உணர்வு அவர்களுக்கு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிதி வெற்றியையும், செழிப்பையும் அடைய உதவும். இவர்கள் வாழ்க்கையில் பணப்பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து விரைவில் எப்படி வரவேண்டுமென்ற தந்திரம் இவர்களுக்கு நன்கு தெரியும்.

எண் 11 மற்றும் 22

முதன்மை எண்கள் 11 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையில் நிதிரீதியாக வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. இந்த முதன்மை எண்கள் தொலைநோக்குப் பார்வை, உள்ளுணர்வு மற்றும் ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும் திறனைக் குறிக்கின்றன.

இந்த நாட்களில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட அசாதாரண திறன்களைக் கொண்டுள்ளனர் மற்றும் வாழ்க்கையில் நிச்சயம் நிதிரீதியாக வெற்றி பெறுவார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, June 3, 2024, 13:19 [IST]
Desktop Bottom Promotion